பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 சேர மன்னர் வரலாறு


வேந்தர் நிலை நினைத்தற்கு மிக்க இரங்கத்தக்க தாய் உளது. இப்போது உன்னோடு பகைத்துப் பொருது கெட்டோருடைய நாடுகளில் பெருந்துறைகள் பல உண்டு. அவற்றின் கரையில் மருதமரங்களும் காஞ்சி முருக்கு முதலிய மரங்களும் நிற்கும்; அவற்றின் பூக்கள் சொரிந்துகிடக்கும் அடைகரையில் நந்தும் நாரையும் செவ்வரியும் உலாவும்; நீர்நிலைகளில் தாமரையும் ஆம்பலும் பெருகியிருக்கும்; இத்தகைய நாடுகள் இப்போது பாழ்பட்டுப் பல்லும் முள்ளும் நிரம்பிப் பொலிவிழந்து விட்டன[1]” என்று பாடி, அவனது வெற்றிச் சிறப்பை எடுத்துரைத்தார்.

இதுகேட்ட வேந்தனுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்றா யினும், தன் நாட்டின் நலம் அறிதற்கண் பிறந்த வேட்கை அடங்கவில்லை. அதனைக் கோதமனார் அறிந்து கொண்டார். “வேந்தே, நின்படையின் தூசிப் படை முன்னுறச் சென்று பகைவர் அரண்களை அழித்தேக, நின் தானைத் தலைவரும் மறச் சான்றோரும் கூடிய பெரும்படை, புலியுறை கழித்த வாளை ஏந்திக் கொண்டு அதன் பின்னே சென்று பகைவர் படையகம் கூடிய பெரும்படை, புகுந்து பொருகின்றதோர் பொற்புடையது; நீ அப்பொரு படைக்குத் தலைமை தாங்கிச் செல்கின்றாய்; நின் பாசறை யிருக்கையில் வில்வீரர் செறிந்து போர்வேட்கை மிகுந்து விரைகின்றனர்; நீ அவர்கள் இடையே இருந்து போர்க்குரிய செயல் முறைகளை ஆராய்ந்து உரைக்கின்றாய்; நீ அந்தணரை


  1. பதிற். 23.