பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்யானைச் செல்கெழு குட்டுவன் 149


களையோ நோவாமல், இஃது அல்லற் காலத்துப் பண்பு என்று சொல்லிக் கண்ணீர் சொரிந்து கையைப் புடைத்துப் பிசைந்து வருந்துகின்றனர். மனைகள் பீர்க்குப் படர்ந்து நெருஞ்சி மலிந்து பாழ்பட்டுக் கிடப்பன, காண்[1]” என்றார்.

இத்தகைய சொற்களால் குட்டுவன் மனத்தே மாறுதலொன்று உண்டாயிற்று. போர் நிகழாமல் தடுத்து, நாட்டு மக்களது வாழ்வு அமைதியோடு இயலுமாறு செய்வதில் அவன் கருத்துடையனானான். அக்காலத்தே இப்போது திருவாங்கூர் நாட்டில் உள்ள கோட்டயம் பகுதியில் வாழ்ந்த வேந்தர் சிலர் பகைத்துப் போர் தொடுத்தனர். வேந்தனுடைய தானைத் தலைவர் போர்க்குப் புறப்பட்டனர். இச் செய்தி குட்டுவனுடைய படைப்பெருமையைக் கண்டு தங்கள் நாடு எய்த விருக்கும் அழிவையும் நினைந்து வருந்தினர். அப் பகுதியில் வாழ்ந்த முதியருட் சிலர் குட்ட நாட்டுப் பாலையூரினரான கோதமனாரைக் கண்டு போரை விலக்குதற்கு ஏற்ற முயற்சி செய்யுமாறு வேண்டினர்.

கோதமனார் குட்டுவனைக் கண்டு, “வேந்தே, நினது பெரும்படை சென்று பரவுதற்கு முன் இந்த நாடு இருந்த சிறப்பைச் சொல்வேன், கேள்; வளையணிந்த இளமகளிர் வயலில் விளைந்திருக்கும். நெற்கதிரைப் பிசைந்து நெல்மணிகளைக் கொண்டு அவல் இடிப்பர்; பின்பு, அவலிடத்த உலக்கையை அருகே நிற்கும் வாழை


  1. பதிற். 26.