பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158 சேர மன்னர் வரலாறு



புன்னாட்டில் கங்கன் என்பவனும், அதன் தென்பகுதியில் கட்டி என்பவனும், அதற்குத் தெற்கிலுள்ள பகுதியில் புன்றுறை என்பவனும், பாயல் மலையை யொட்டி அதன் கீழ்ப்பகுதியில் நாடு வகுத்து அரசு புரிந்து வந்தனர். கங்கன் வழிவந்தோர் கங்கரெனவும், கட்டியின் வழியினர் கட்டியர் எனவும் வழங்கினர். கங்கனாடு மேற்கே கொண்கானத்தையும் கிழக்கே புலி நாட்டையும் எல்லையாகக் கொண்டிருந்தது. இப்போதுள்ள மைசூர் நாட்டைப் பண்டை நாளைக் கங்கனோடு என்றால் பொருந்தும், தென்பாற் கங்க நாட்டில் காவிரியைச் சார்ந்த பகுதியில் கட்டியர் வாழ்ந்தனர். அவருடைய கல்வெட்டுகள் சில சேலம் மாரட்டத்தில் ஓமலூர்ப் பகுதியில் காணப்படுவது இதற்குச் சான்றாகிறது. இந்நாடு பூவானி நாடு என்றும் கல்வெட்டுகளிற் காணப்படும். பூவானி நாட்டின் வடகிழக்கிலும் கிழக்கிலும் தகடூர் நாடு கிடந்தது. பூவானி நாட்டிற்குத் தெற்கில் இன்றைய பவானி, ஈரோடு, பெருந்துறை முதலிய பேரூர்களைத் தன் கண் கொண்டிருக்கும் நாடு புன்றுறை என்ற குறுநிலத் தலைவன் ஆட்சியில் இருந்தது. அதனால் அப்பகுதி புன்றுறை நாடு என வழங்கிற்று; அதுப்பற்றி அப்பகுதியிற் காணப்படும் கல்வெட்டுகள் அப்பகுதியதைப் புன்றுறை நாடு என்று குறிக்கின்றன. இதனைச் சில கல்வெட்டுக்கள் பூந்துறை நாடு என்று கூறினும், அதன் பண்டைய உம்மைப் பெயர் புன்றுறை என்பது நினைவுகூரத் தகுவது; அப்பகுதியிலிருக்கும் பூந்துறை என்னும் ஊர் புன்றுறை எனப்பட்ட பொற்