பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 161



இந் நன்னருள் முதல்வனான நன்னன், கொண்கான நாட்டில் ஏழில்மலைப் பகுதியைத் தனக்கு உரித்தாகக் கொண்டு வாழ்ந்தான். அதன் வடபகுதியான துளுநாடும் அவற்கே உரியதாயிருந்தது. அந்நாட்டில் கோசர் என்னும் மக்கள் வாழ்ந்தனர். “மெய்ம்மலி பெரும்பூண் செம்மற் கோசர்........... தோகைக்காவின் துளுநாடு[1]” என்று சான்றோர் கூறுவது காண்க. துளு நாட்டுள்ளும் மேலைக் கடற்ரையைச் சார்ந்த நெய்தற் பகுதியிலே அவர்கள் வாழ்ந்தமை தோன்ற, “பல்வேற் கோசர் இளங்கள் கமழும் நெய்தல் செறுவின் வளங்கெழு நன்னாடு[2]” என்று கல்லாடனார் சிறப்பித்துரைக்கின்றார்.

இனி, நன்னன் வேள்புலத்து வேளிர் தலைவனாதலால், அவன் ஆட்சியின் கீழிருந்த கோசரை வேளிற் என்றற்கில்லை. அவர்களை வேளிரென யாண்டும் சான்றோர் குறித்திலர், மற்று, அந்நாளில் கொங்கு நாட்டில் வாழ்ந்த அதியர், மழவர் என்பாரைப் போல இக்கோசரும் ஓர் இனத்தவராக வாழ்ந்தவர் எனக் கோடல் சீரிதாம். ஆனால், அதியரும் மழவரும் ஒரு பகுதியில் நிலைபெறத் தங்கி, நாடு வகுத்து, அரசு நிலை கண்டு, வாழ்ந்தாற்போல இக்கோசர் எப்பகுதியிலும் நிலைபேறு கொண்டிலர். துளு நாடு, கொங்கு நாடு, பாண்டி நாடு என்ற இந்நாடுகளில்தான் இவர்கள் பெரும்பாலும் இருந்திருக்கின்றனர். சேர நாட்டிற்குத் தெற்கிலுள்ள தென்பாண்டிநாட்டு வாட்டாற்றுப்


  1. அகம் 15.
  2. ஷை 113.