பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162 சேர மன்னர் வரலாறு



பகுதியில் எழினியாதன் காலத்தில் இக்கோசர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இவ்வாட்டாறு, தஞ்சை மாவட்டத்துப் பட்டுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வாட்டாத்திக் கோட்டைப் பகுதியாயின், கோசர்கள் பாண்டி நாட்டின் வடபகுதியில் சோழ நாட்டை அடுத்து வாழ்ந்தனர் எனக் கொள்ளலாம். கொல்லிமலைக்குரிய வேளிரது ஆணைவழி நின்றொழுகிய மழவர் போல, கொண்கான நாட்டு நன்னர் வழிநின்று அவர் தங்கிய இடங்களில் இக்கோசர் வாழ்ந்திருக்கின்றனர். பாண்டி வேந்தரிடத்தும் இக்கோசர்கள் மறப்படை மைந்தர்களாகவே இருந்துள்ளனர். ஏனைச் சேர நாட்டிலும் சோழ நாட்டிலும் இக்கோசரது இருப்புச் சான்றோர்களால் குறிக்கப்படவில்லை.

இக்கோசர்களைப் பற்றி ஆராய்ச்சி நிகழ்த்திய அறிஞர்கள், பிரமதேவன் வழிவந்த குச முனிவன் மக்களான குசாம்பன், குசநாபன், ஆதூர்த்தன், வசு என்ற நால்வரும் கௌசாம்பி முதலிய நான்கு பெரு நகரங்களை நிறுவி வாழ்ந்தனர் என்றும், அவர்களின் வழிவந்தவர் இக்கோசர் என்றும், நான்கு ஊர்களை நிலைகொண்டு வாழ்ந்தமை பற்றி இவர்கள் நாலூர்க் கோசர்[1] என்று கூறப்பெற்றனர் என்றும், கோசாம்பி நாட்டைப் பின்னர் “வத்ஸன்'’ என்ற வேந்தன் ஆண்டனன் என்றும், “வத்ஸ் கோசர்” என்பது இளங்கோசர் எனத் தமிழர்களால் மொழிபெயர்க்கப் பெற்றது என்றும்[2] கூறுகின்றனர். ஆனால் உண்மை


  1. குறுந். 15.
  2. திரு. இராகவய்யங்கார். கோசர். பக். 47-8.