பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166 சேர மன்னர் வரலாறு



கிளையினர், கொங்கு நாட்டிற் படர்ந்தபோது அவர்களோடே இக்கோசர்களும் சென்று தங்கினர். எங்குச் சென்றாலும், அங்கிருந்த வேந்தர்கட்குப் படை மறவராய் நின்று பணி செய்வதே, இவர்கள் தமக்கு உரிமைத் தொழிலாக மேற்கொண்டனர். முதுமையினும் இளமைப் பண்பு வாடாத உள்ளமும் சொன்ன சொல் பெயராத வாய்மையும் சிறப்பாகவுடையராதலால், இக் கோசரைச் சான்றோர், “ஒன்று மொழிக் கோசர்[1]“ என்று விதந்து கூறுவர். இக்கோசருட் சிலர், “இளங்கோசர்” “இளம்பல் கோசர்[2]” என்று கூறப்படுவர். இதற்குக் காரணம் உண்டு. முன்வந்தோரை மூத்தோர் என்றும், பின் வந்தோரை இளையர் என்றும் குறிப்பது தமிழ் வழக்கு. அதனால், பின் வந்த கோசர் “இளங்கோசர்” எனப்பட்டனர். அவரும் பலர் என்பது விளங்க “இளம்பல் கோசர்” “பல்லிளங் கோசர்” எனச் சான்றோர் குறித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலைக்காடு பகுதிகளில் வாழ்ந்த நன்னர் வழியில், நன்னனூரை (ஆனைமலையை)த் தலைநகராகக் கொண்டு ஒரு நன்னன் வாழ்ந்து வந்தான். அவன் கோசரது படைத்துணையால் வலிமிகுந்து தனி அரசாக முயன்றான். அக்காலத்தே குட்ட நாட்டை ஆண்டுவந்த பல்யானைச் செல்கெழுகுட்டுவன், துறவுள்ளம் பூண்டு தவவேள்வி செய்வதில் ஈடுபட்டிருந்தது அவற்குப் பெரிய வாய்ப்பினை அளித்தது. குட்ட நாட்டின் வட பகுதியிலும், கிழக்கிலுள்ள பூழி


  1. அகம். 196.
  2. புறம் 169.