பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 173



உண்டாயின. அவர்கள் திரண்டெழுந்து நன்னனைத் தாக்கலுற்றனர். அவனது மா மரத்தையும் வெட்டி வீழ்த்தினர். நன்னன் தான் ஆராயாது செய்து தவற்றுக்கு வருந்தினான்; தன் படைத் துணைவர்களான கோசர், தன்பால் பகைத்தொழுது தெரியின், சேர மன்னரும் பிறரும் தன்னை வேரொடு தொலைத்தற்கு நாடுவர் என்று அஞ்சிப் புன்றுறை நாட்டிற்கு ஓடிவிட்டான்[1]. ஈரோட்டுக்கு அண்மையிலுள்ள பெருந்துறையென இன்றும் வழங்கும் மூதூரில் தங்கினான். அவன் பக்கல் நின்று பொருத்த வீரர் பலர் மாண்டனர். சிலர் அவனோடே சென்றனர், பெருந்துறையில் தங்கிய நன்னன், மா மரத்தைக் காவல் மரமாகக் கொள்வதை விடுத்து வாகை மரமொன்றைக் காவல் மரமாகக் கொண்டு அதனைப் பாதுகாத்து வந்தான். அதனருகே தோன்றிய ஊர் வாகைப்புத்தூர் என வழங்குவதாயிற்று. விசய மங்கலத்துக்கும் பெருந்துறைக்கும் இடையே வாகைப் புத்தூர் என்று ஓர் ஊர் இருந்ததாக அப் பகுதியிலுள்ள இடைக்காலக் கல்வெட்டொன்று[2] கூறுகிறது.

நன்னன் கோசரது நட்பிழந்து வலி குன்றிய செய்தியை நார்முடிச் சேரலுக்கு ஒற்றர் போந்து தெரிவித்தனர். உடனே அவன் பெரும்படை யொன்றைத் திரட்டிக்கொண்டு சென்று, பூழிநாட்டின் வடக்கிலும் பொறை நாட்டிலும் நன்னன் கவர்ந்து கொண்டிருந்த சேரநாட்டுப் பகுதிகளை வென்று தனக்கு


  1. குறுந். 73.
  2. Ep. A.R. No. 569 of 1905.