பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பேராசிரியர், டாக்டர், மா. இராசமாணிக்கனார்


ஒரு நாட்டு வரலாற்றைத் துணிவதற்கு அந் நாட்டு இலக்கியம், புதைபொருள், நாணயம், கல்வெட்டு, அயல் நாட்டார் கூற்றுகள், நாட்டிலுள்ள பிற அடையாளங்கள் முதலியன தேவையாகும். நம் தமிழகத்தில் சங்ககால வரலாற்றை அறியத் தமிழிலக்கியமும் அயல் நாட்டார் கூற்றுகளுமே சான்றாக அமைகின்றன. பிற சான்றுகள் மிகுதியாகக் கிடைக்க வழியில்லை . இந் நிலையில் சங்ககாலச் சோழர் வரலாறும் பாண்டியர் வரலாறும் பேராசிரியர் நீலகண்ட சாத்திரியாராலும் சேரரது வரலாறு ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு உயர்திரு. கே. ஜி. சேஷய்யர் அவர்களாலும் ஆங்கிலத்தில் எழுதப்பெற்றன. ஆயினும், தமிழ்ப்புலவர்களும் தமிழார்வம் கொண்ட பொதுமக்களும் படிக்கத்தகும் முறையில் சோழரது வரலாறும் பாண்டியர் வரலாறும் தமிழில் உயர்திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார், உயர்திரு. எஸ். சதாசிவப் பண்டாரத்தார் முதலியவர்களால் எழுதப்பெற்றுள்ளன. சங்ககாலச் சேரர் வரலாறு - இதுகாறும் தமிழில் வெளிவரவில்லை.

சங்க நூல்களை மட்டும் படித்துச் சேரர் வரலாற்றை எழுதுவது சிறப்பன்று. சேரநாடு முழுமை