பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 சேர மன்னர் வரலாறு



தகையாதல் கண்டு, தாமும் தமக்கு இல்லையென்பது இன்றி இரவலர்க்குப் பெருங்கொடை புரிகின்றனர்;[1] காண்” என்று இசைநலம் சிறக்கப் பாடினர்.

இஃது இவ்வாறிருக்க, பாண்டி நாட்டின் வடக்கிலுள்ள வெள்ளாறு பாயும் பகுதிக்குப் பண்டைநாளில் கோனாடு என்று பெயர் வழங்கிற்று. இவ் வெள்ளாற்றின் வடகரையில் புதுகோட்டையிருக்கிறது. இந்த நாட்டு உறத்தூர் கூற்றத்து உறத்தூர்ப் பகுதியில் பொருந்திலர் என்பார் வாழ்ந்து வந்தனர். அவர்கட்கு எவ்வி யென்னும் வேளிர் தலைவன் காவலனாக விளங்கி னான். அக் கோனாட்டின் தென்னெல்லையாகப் பறம்பு நாடு இருக்கிறது. தன் கண் இருந்து தனி அரசு நடத்திய வேள்பாரிக்கும் எவ்விக்கும் தொடர்புண்டு. பொருந்திலர்க்கும் அவர்தம் தலைவனான வேள் எவ்விக்கும் எக் காரணத்தாலோ மன்வொருமை சிதைந்திருந்தது. அதனால், எவ்வி, அந் நாளில் சிறந்து விளங்கிய நெடுமிடல் அஞ்சி என்பவனைத் துணை வேண்டினான். அந்த நெடுமிடல் இப்போதைய திண்டுக்கல்லுக்குத் தெற்கிலிருக்கும் பெரியகுளம் பகுதியில் தலைவனாக இருந்தான், அவனது நாடு நெடுங்கள் நாடு என்று இடைக் காலத்தே பெயர் பெற்றிருந்தது. தன்னாட்டிற்குக் கிழக்கிலுள்ள கோனாட்டு வேளிர் தலைவன் செய்து கொண்ட வேள்கோட்கு இசைந்த நெடுமிடல், பொருந்திலர் தலைவனைக் கண்டு வேண்டுவன கூறினான், பொருந்திலர் அவனது உரையைக்


  1. பதிற். 39.