பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180 சேர மன்னர் வரலாறு



வினை பயின்ற யானைகள் மிகப்பல இருந்தன. அவை நெடுமிடலஞ்சியின் நாடு நோக்கிச் சென்றன. அஞ்சியின் படையும் சேரமான் படையும் கைகலந்து செய்த போரில் அஞ்சியின் படை பஞ்சிபோற் கெட் டொழிந்தது. நெடுமிடலும் தன் கொடுமிடல் துமிந்து கெட்டான். அவனுடைய வளமிக்க நெல் வயல் பொருந்திய நாடு யானைப் படையால் அழிந்தது. நார்முடிச் சேரல் அவனது நாட்டின் நலம் அறிந்து, அவனது “பிழையா விளையுள் நாட்டை” வென்று கொண்டான். ஒருபால் நன்னனையும் ஒருபால் நெடுமிடல் அஞ்சியையும் வென்று புகழ் மிகுந்த நார்முடிச் சேரலது பெருநலம் தமிழகம் எங்கும் பரந்து விளங்கிற்று.

நார்முடிச் சேரலின் வென்றி நலத்தைக் காப்பியனார் பாடலூற்றார்; “திசை முழுதும் விளங்கும் சால்பும் செம்மையும் நிறைந்த வேந்தே, நினது தூசிப் படை, பகைப் புலத்தின் எல்லை முற்றும் சென்று பரவி வென்றி மிகுந்து ஆங்குப் பெற்ற செல்வத்தைப் பாணர் முதலிய இரவலர்க்கு ஈந்து எஞ்சியவற்றை நின்பால் தொகுத்துள்ளனர். அச் செல்வத்தையும் துளங்குடி திருத்திய நின் வளம்படு செயல் நலத்தையும் பிறவற்றையும் எண்ணலுறின், எண்ணுதற்குக் கொண்ட கழங்கும் குறைபடுகிறது. அடுபோர்க் கொற்றம் அடுத்தார்க் கருளல் முதலிய பலவற்றாலும் நீ மாட்சி மிகுந்திருக்கின்றாய்; ஆயினும் நின் செயல்களுள் ஒன்று எனக்குப் பெரு மருட்சியை உண்டுபண்ணிற்று. நெடுமிடல் அஞ்சியோடு பொருதற்கு எழுந்து சென்று