பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 183



சேரமான் வஞ்சிநகர்க்கண் இருக்கையில் அவனுடைய வென்றி பெருமை முதலிய நலங்களை வியந்து, சான்றோர் பலர் அவனைப் பாடிப் பாராட்டினர். நாடோறும் இப் பாராட்டுகள் பெருகி வருவது கண்ட நார்முடிச்சேரல், இப் பாராட்டுரைகளை நயவாதான் போலக் காப்பியனாரோடு சொல்லாடி னான். அக் காலை, அவர், வேந்தனை நோக்கி, “சேரலே, புகழ்தற்குரியாரைப் புகழாமை சான்றோறாருடைய சான்றாண்மைக்கு அழகன்று. மேலும், அவர் செய்யா கூறிக் கிளக்கும் சிறுமையுடையரல்லர்; ஆதலால், நின் போர் நலமே அவர் உரைக்குப் பொருளாகிறது. நீ போர்செய்யும் களம் யானைமரப்பும் தேர்க்கால்களும் சிதறிக் கிடக்கும் காட்சி நல்குகிறது; எருவைச் சேவல்கள் தம் பெடையொடு கூடி நிணந்தின்று மகிழ, ஒருபால் கவந்தங்கள் ஆடா நிற்கும்; வீழ்ந்தோரது குருதி பரந்து போர்க்களம் அந்திவானம் போல் ஒளி செய்கிறது; பேய்கள் எழந்து கூத்தாடுகின்றன; இவ்வாறு போர்க்களம் சிறப்புறுதற் கேதுவாக நீ நின் தானையைப் பாதுகப்பது, உரைப்பார் உரையாய் விளங்கிறது[1]” என்றார். வேந்தன் காப்பியனார் பாட்டைக் கேட்டு ஏனைச் சான்றோர்க்குச் செய்தது போலப் பெருங் கொடையை நல்கி மகிழ்வித்தான்.

பிறிதொருகால், குறுநிலத் தலைவர் சிலர் நார்முடிச் சேரல்பால் பகை கொண்டு போர் கொடுத் தனர் சின்னாட்களாய்ப் பகை பொறாமையால்


  1. பதிற். 35.