பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188 சேர மன்னர் வரலாறு



விரண்டினுள் ஒன்றே காப்பியனார் குறிக்கும் திருமால் கோயிலாம் என்பது தெளிவாகிறது. சிலப்பதிகார அரும்பத்வுரைகாரர் கூற்றைப் பின்பற்றி யுரைத்தலால், பதிற்றுப் பத்தின் உரைகாரர் இவ்வாறு கூறினாரெனக் கொள்ளல் வேண்டும். சிலர், திருப்புனித்துறா என இப்போது வழங்கும் திருப்பொருநைத் துறையில் உள்ள திருமால் கோயிலே இந்த ஆடகமாடத்துத் திருத்துழாய் அலங்கற் செல்வன் கோயிலாம் எனக் கருதுவர்; அஃது ஆராய்தற்கு உரியது.

இவ்வாறு தன்னைப் பல பாட்டுக்களாற் பாடிச் சிறப்பித்த காப்பியாற்றுக் காப்பியனார்க்குச் சேரமான் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், ‘'நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கே கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகம் கொடுத்தான்'’ என்றும், அவன் இருபத்தை யாண்டு அரசு வீற்றிருந்தான் என்றும் பதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பதிகம் கூறுகிறது. இப் பரிசு பெற்ற காப்பியனாருக்கு நார்முடிச்சேரல்பால் பெருமகிழ்ச்சி யுண்டாயிற்று. அதனால் அவரது உள்ளத்தே அழகியதொரு பாட்டு உருக்கொண்டு வந்தது. “வளம் மயங்கிய நாட்டைத் திருத்தி வளம் பெருகுவித்த களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலே, பகைவர் நாட்டு எயில் முகம் சிதைதலால் அதற்குக் காவல் புரியுமாறு நாற்படையும் செலுத்தி நல்வாழ்வு நிகழ்விக்கின்றாய்; நீ பரிசிலர் வெறுக்கை; பாணர் நாளவை; வாணுதல் கணவன்; மள்ளர்க்கு ஏறு; வசையில் செல்வன்; வான வரம்பன். இனியவை பெறின் தனித்து நுகர்வோம் கொணர்க எனக் கருதுவதின்றிப் பகுத்துண்டல் குறித்தே