பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200 சேர மன்னர் வரலாறு



பகுதியில் அரசுபுரிந்த வேந்தர் அறுகை குன்றத்தூரி லிருந்து தமது ஆணையைப் பிறப்பிப்பது உண்டு எனச் சோழபுரத்துக் கல்வெட்டு ஒன்றால்[1] அறிகின்றோம்.

சோழர் பொருட்டுப் போர் ஒப் பழையன், கொங்கு : நாட்டவரோடு ஒருகால் பெரும் போர் செய்து வெற்றி பெற்றான்; அறுகை, கொங்கு நாட்டினின்றும் தென்பாண்டி நாட்டிற்குட் போந்திருந்த ஒரு குடியிற் பிறந்தவன். அதனால், பழையர்பால் அறுகைக்கு வெறுப்புண்டாகி யிருந்தது; சேரன் செங்குட்டுவனோடு நேரிவாயிலிற் பொருத்தமிழிந்த சோழர் ஒன்பதின்மர்க்குத் துணை செய்து தனக்கு நண்பனான செங்குட்டுவனது வெகுளிக்கு இரையாகியவன் என்பதனாலும், தனக்குச் செங்குட்டுவன் நண்பன் ஆதலாலும், மோகூர்ப் பழையன்மேல் போர்க்கெழுந்தால் அவன் அஞ்சி யோடுவன் என்று அறுகை படையை மோகூர்மேல் செலுத்தி அதனைச் சூழ்ந்து கொண்டு உழிஞைப் போர் தொடுத்தான். மோகூர் மன்னன், சோழவேந்தரும் வேளிரும் துணைவரத் தனது பெரும்படையைச் செலுத்தி அறுகையின் படையை வென்று வெருட்டி னான். அறுகை போரிழந்து புறந்தந்து ஓடி ஒளிந்து கொண்டான். இவ் வேந்தர் பண்டு செங்குட்டுவற்குத் தோற்ற சோழர் என அறிக.

இச் செய்தி செங்குட்டுவனுக்குத் தெரிந்தது. உடனே, அறுகை தன்னாட்டிற்கு மிக்க சேணிடத்தே இருப்பதை அறிந்திருந்தும், தான் செய்த கடற்போர்


  1. Ep. A.R. No. 493 of 1909