பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 201



செவ்வே நிகழ்ந்து வென்றி விளைப்பதற்கு அவ்வறுகை துணைசெய்தமையின், அவன் தனக்குக் கேளான் என வஞ்சினம் மொழிந்து, செங்குட்டுவன் தன் பெரும் படையுடன் போந்து மோகூர்ப் பழைனோடு போர் தொடுத்தான். பழையனும் நெடுமொழி நிகழ்த்திக் கடும்போர் உடற்றினான். அவனுக்குச் சோழவேந்தர் சிலரும் வேளிர் சிலரும் துணை புரிந்தனர். செங் குட்டுவன் அவனுடைய மோகூர் அரண்களை அழித்து, வேந்தர் முதலியோரது துணையைச் சிதைத்து, அவனுடைய காவல் மரமான வேம்பினை வெட்டி, அது போர்முரசு செய்வதற்கு ஏற்றதாய் இருப்பது கண்டு, ஏற்றவாறு துண்டஞ் செய்து களிறு பூட்டிய வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வஞ்சி மாநகர் வந்து சேர்ந்தான். இதனைப் பரணர், “நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை ஒழுகை யுய்த்தோய்[1]” என்றும், விறளியாற்றுப் படையாக, “யாமும் சேறுகம் நீரும் வம்மின், துயலும் கோதைத் துளங்கியல் விறலியர், கொளைவல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர். கருஞ்சினை விறல் வேம்பு அறுத்த, பெருஞ்சினக் குட்டுவன் கண்டனம் வரற்கே[2]” என்றும் பாடினர்.

பரணர் பாடிய பாட்டுக்குச் செங்குட்டுவன் மிக்க பரிசில் தந்தான். அவர், பின்பு பொறை நாடு கடந்து ஆவியர் தலைவனான வையாவிக் கோப்பெரும் பேகன் நாட்டுக்குச் சென்றார். செங்குட்டுவன் வஞ்சி நகர்க்கண் இனிதிருக்கையில் சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டி


  1. பதிற். 44.
  2. பதிற். 49.