பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் 209



ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கு தெரிந்தது. அவன் Fதகன்னர் முதலிய வடவரது குறும்பு பொதுவாகத் தமிழகத்தின் தனி மாண்புக்கு ஊறு செய்யும் என உணர்ந்து பாண்டி வேந்தர்க்கும் சோழ வேந்தர்க்கும் வேளிர்களுக்கும் அறிவிப்பத் தமிழ் வேந்தர் பலரும் கருத்தொருமித்துப் படைத்துணை புரிந்தனர். தமிழ்ப் பெரும்படை திரண்டு குடபுலம் நோக்கிச் சென்றது.

அக் காலத்தே, பொறை நாட்டின் கீழ்ப் பகுதியில் நச்செள்ளையார் என்ற புலவர் பெருமாட்டியார் வாழ்ந்தார். இப்போது அப்பகுதி பாலைக்காடு நாட்டில் நடுவட்டம் என வழங்குகிறது. தலைமகன் வினை மேற்கொண்டு தலைமகளைப் பிரிந்து சென்று வினை முடித்து மீண்டுவந்து தன் மனையை அடைந்து இனிதிருக்கையில், மனைவியின் தோழியை நோக்கி, என் பிரிவுக் காலத்தில் நீ நன்கு ஆற்றியிருக்குமாறு இவட்குத் துணை செய்தாய்; உனக்கு என் நன்றி” என்று கூற, அவனுக்கு அவள், “தலைவ, நின் வருகையை முன்னர் அறிவித்த காக்கைக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்; இந் நாட்டுத் தொண்டி தகர்க்கண் இடப்பெறும் நெற்சோற்றில் நள்ளியின் கானத்தில் வாழும் இடையர் தரும் நெய்யைப் பெய்து ஏழு கலங்களில் ஏந்தித் தரினும், நின் வரவை கரைந்து உணர்த்திய காக்கைக்கு நன்றியாகச் செலுத்தக் கடவ பலி பெரிதாகாது, மிகவும் சிறிதாம்” என்றாள். இக் கருத்தை நற்செள்ளையார்,

“திண்டோர் நள்ளி கானத்து அண்டர்
பல்லா பயந்த நெய்யின் தொண்டி