பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214 சேர மன்னர் வரலாறுதெற்கில் வேளிர்கள் வாழும் நாடுகளைச் சூறையாடிக் குறும்பு செய்யத் தலைபட்டனர். நெடும்பொறை நாட்டை[1] அடுத்திருக்கும் மீகொங்கு நாடும்[2] குறும்பு நாடும் சேரர் ஆட்சியில் இருந்தன. அம் மழவருள் சிலர் சேரர் ஆட்சியில் தலைவராகவும் தானை மறவராகவும் இருந்தனர். ஆயினும், மழவரது குறும்பு நாளடையில் மீகொங்கு நாட்டிலும் பொறை நாட்டிலும் பரவத் தலைப்பட்டது.

சேரலாதன் இம் மழவரது குறும்பை அடக்க வேண்டியவனானான். அதனால் தன் தானை மறவர்களைப் பொறை நாட்டின் வழியாகக் கொங்கு நாட்டிற் செலுத்தி மழவர்களை ஒருங்கலுற்றான். அவர்கள் சிறந்த குதிரை வீரர்கள். அதனால், அவர்களை அறவே பகைத்து ஒதுக்குவது வேண்டத் தக்கதன்று என்பதைத் தேர்ந்து, அவர்களை வளைத்துப் பற்றித் தனக்கு அடங்கித் தன் ஏவல் வழி நிற்குமாறு பண்ண விரும்பினான். அவர்கட்குத்துவரைத் துவையலும் ஊன் கலந்து அட்ட சோறும் மிக்க விருப்பமானவை; அவற்றை நிரம்ப நல்கித் தன் தானை மறவராகக் கொண்டு, பின்னர் நிகழ்ந்த போர்கள் பலவற்றில் அவர்கட்கும் மெய்ம்மறையாய் நின்று அன்பு செய்தான்[3] அதனால் மழவர்கள் குறும்பு செய்வது தவிர்ந்து நண்பர்களாய் ஒழுகினர் அதனால் பதிகமும்[4] “மழைவரைச் செருவிற் சுருக்கி” என்று கூறுகிறது.


  1. பாலைக்காட்டை யொட்டிய மேலைமலை நாடு
  2. ஈரோடும் அதனை யுள்ளிட்ட பகுதியும்.
  3. பதிற். 55.
  4. ஷை பதி. vi.