பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் 215



சேரலாதன் மழவரது குறும்பை அடக்கித் தனக்கு உரியராக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொங்கு நாட்டில் ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்” என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இப்போது இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவிக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருப்பது யாவரும் அறிந்தது.

சான்றோர் செவிகைப்பச் சொல்லினும் அவற்றை ஏற்கும் பண்புடைய வேந்தன் பொன்றாப் புகழ் கொண்டு விளங்குவன் என்பதற்கு ஒப்பச் சேரலாதன், சான்றோர் அவ்வப்போது கூறுவனவற்றை யேற்று இனிதின் ஒழுகிப் புகழ்பெற்றான். ஒருகால், சேரலாதன் தன் ஆட்சியின் கீழிருந்து கொண்டே செருக்கிக் குறும்பு செய்த வேந்தன் ஒருவனைப் போரில் வென்று ஒடுக்கித் தன் நகர்க்குத் திரும்பி வரலானான் வரும் வழியல் அவ் வேந்தனுடைய அரண்மனை நின்றது. அதனை