பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக்கடுங்கோ வாழியாதன் 225



அக் காலத்தே, அப் பகுதியையும் காவிரிக்கு வடகரை யிருந்தனர். கோப்பெருஞ் சேரல் அச் சோழ வேந்தருடன் ஒள்ளிய வாட்போர் செய்து கீழ்க் கொங்கு நாட்டையும் அதற்கு நேரே காவிரியின் வடகரையில் கொல்லிமலை விச்சி (பச்சை) மலைவரையில் இருந்த மழநாட்டையும் வென்று மேம்பட்டான். பின்னர்ச் சோழரோடு உறவு கொண்டு கருவூர்க்கு அண்மையில் ஓடும் ஆண் பொருநை யாற்றை வரம்பறுத்து அதன் கரையிலிருந்த ஊரின் பழம் பெயரை மாற்றிக் கருவூர் என்ற பெயரையும், அந் நகர்க்கு நேர் வடகரையில் விளங்கிய மழநாட்டுப் பேரூரின் பெயரை மாற்றி முசிறியென்ற பெயரையும் இட்டு, இவை தன் சேரநாட்டிற் குரியவை என இன்றுகாறும் விளங்குமாறு செய்தான். இடைக்காலக் கல்வெட்டுகள் பலவும், கருவூரைக் கருவூரான வஞ்சிமா நகரம்[1] என்றும், அமராவதி யென்று இப்போது மருவி வழக்கும் ஆற்றை ஆன்பொருநை[2] என்றும் கூறுகின்றன. இச் செயல்களால் இவ் வேந் தனைச் சான்றோர் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருச் சேரல் இரும்பொறை என வழங்கலுற்றனர். கருவூரும் முசிறியும் சேர நாட்டின் கடற்கரைப் பெரு நகரங்கள் என்று முன்பே கூறினோம்; அவற்றின் நினைவாகவே, காவிரிக்கரையில் கருவூரும் முசிறியும் பெயர்பெற்றன.

அக் காலத்தே, நரிவெரூஉத்தலையார் என்ற புலவர் பெருமான் ஒருவர் இருந்தார். அவர் ஒருவகை நோய்வாய்ப்பட்டு உடல் நலம் குன்றி மிகவும்


  1. A. R. No. 166 of 1936-7
  2. Ibid 335 of 1927 - 8