பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக்கடுங்கோ வாழியாதன் 241



பாலி என்பது குண்டுகட்பாலியென ஏடுகளில் திரிந்து வழங்குவதாயிற்று. அப் பகுதி தமிழ் நலம் குறைந்து கேரளமான காலையில் பாலிக்குன்னு எனச் சிதைந்தது.

பாலியாதனார் வஞ்சி நகர்க்கண் இருந்து அரசு புரிந்து, சான்றோர் பரவும் தோன்றலாய் விளங்குவது தெரிந்து, செல்வக்கடுங்கோ வாழியாதனைக் காணச் சென்றார். இடையில் அரசியற்றலைவர் சிலரைக் கண்டார். அவர்கள் இவர் குடநாட்டவர் எனத் தெரிந்து இவரைத் தொடக்கத்தே வேந்தனிடம் நேரிற் செல்லாவாறு தடுத்தனர். வடவருள் ஒருவராய்க் குடநாட்டவர் போல உருக்கொண்டு வந்திருக் கின்றாரோ என அவர்கள் ஐயுற்றனர். ஆதனார், செல்வக்கடுங்கோவின் மறமாண்பையும் அறவுணர்வை யும் கொடைச் சிறப்பையும் உடன் வந்த கிணைப் பொருநன் இயக்கிய பறையிசைக் கேற்பப் பாடினர். அதன்கண், கடுங்கோவை, “எங்கோன்” என்று பேரன்போடு பாராட்டி, “பகை மன்னர் பணிந்து திறையாகக் கொடுத்த செல்வத்தை நகைப்புல வாணராகிய பரிசிலர்க்கும் இரவலர்க்கும் ஈந்து அவர் நல்குரவை அகற்றி மிகவும் விளங்குக” என்று பாடினர். அது கேட்டதும் அவர்கள் தாம் ஏந்திய குடையைப் பணிந்து அவர்க்கு வணக்கம் செய்து வேந்தனிடம் விடுத்தனர். விடுத்தனர்.

செல்வக் கடுங்கோ, ஆதனாரை அன்போடு வடவேற்று அவர் பாடியவற்றைக் கேட்டு மிக்க உவகை கொண்டு குன்று போலும் களிறும், கொய்யுளை அணிந்த குதிரையும், ஆனிரையும், நெல்லம் பிறவம்