பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246 சேர மன்னர் வரலாறு


செலுத்தும் தோட்டி தாங்கவும், குதிரைகளின் கடுவிசை தாங்கவும், வில்லிடைத் தொடுத்து அம்பு செலுத்தவும், பரிசிலர்க்கு அரும்பொருளை அள்ளி வழங்கவும் வேண்டியிருப்பதால், ‘வலியவாகும் நின் தாள்தோய் தடக்கை[1]’ என்றும் அழகு திகழப் பாடினார். உவகை மிகுதியால், கடுங்கோ உள்ளம் நாணி உடல் பூரித்தான்.

செல்வக் கடுங்கோ அரசியற் பணியில் ஈடுபட்ட டிருக்குங்கால் கபிலர் சேர நாட்டைச் சுற்றிப் பார்த்து வந்தார். அந் நாட்டின் மலைவளமும் பிறவளங்களும் அவர்க்கு மிக்க இன்பத்தைச் செய்தன. கடலிலிருந்து எடுக்கப் பெற்ற முத்துகளைப் பந்தர் என்னும் ஊரினர்[2] தூய்மை செய்து மேன்மை யுறுவித்தனர்; கொடுமணம்[3] என்னும் ஊரிலிருந்து அரிய கலங்கள் செய்யப் பெற்று வந்தன. காட்டு முரம்பு நிலப் பகுதியில் முல்லையும் பிடவமும் பூத்து அழகிய காட்சி நல்கின. முல்லைப் பூவின் தேனையுண்டு பிடவத்தைச் சூழ்ந்து முரலும் வண்டினம், சேர நாட்டு மறவர் அணியும் பனந் தோட்டுக் கண்ணியில் விரவப்படும் வாகைப் பூவின் துய்போலத் தோன்றின. அங்கு வாழ்பவர் அந் நிலத்தை உழுத சாலின்கண் மணிகள் பல கிடைக்கப் பெற்றனர்.[4] நெல்விளையும் வயற் பகுதியில் வாழ்ந்தோர் வயலில் நெல் விளைந்த போது, நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் நெல்லைத் தொகுத்து வயற்புறத்தே நிற்கும் காஞ்சி மரங்களின் நீழலிற் குவித்துக் கள் விற்பார்க்குக்


  1. புறம், 14,
  2. பந்தர் இப்போது பொன்னாளி வட்டத்தல் பந்லூர் என்ற பெயருடன் இருக்கிறது.
  3. கொடுமணம் திருவாங்கூர் அரசில் குள்ளத்தூர் வட்டத்தில் உளது. பதிற் 67.
  4. பதிற் 66.