பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக்கடுங்கோ வாழியாதன் 247



கொடுத்து அதனை வாங்கியுண்பர். களிமயக்குற்ற சிலர் தம் தலையிற் சூடிய ஆம்பற் கண்ணியை மொய்க்கும் வண்டுகளை ஓப்பி மகிழ்வர்[1] இப் பகுதிகளை ஆளும் சிற்றரசர், சில காலங்களில் தமது வலியையும் கடுங்கோலின் பெறாவலியையும் ஆராய்ந்து போர் தொடுப்பதும், அதனால் அந் நாடுகள் வளன் அழிவதும் கபிலர் நினைவை வருத்தின. அவர் கடுங்கோவை வேண்டி, “வேந்தே , நின் பகைவர் பணிந்து திறைதருவா ராயின், அதனை யேற்றுப் போரை நிறுத்துக; அவர் நாடுகள் செல்வ வளத்தால் புலவர் பாடும் புகழ்பெற்று விளங்கும்[2]“ என்று இயம்பினர்.

செல்வக்கடுங்கோ ஆட்சி புரிந்து வருகையில் சோழ பாண்டிய நாட்டுத் தலைவர்களிற் சிலர் கொங்கு நாட்டில் வஞ்சி சூடிப் போர் செய்தனர். பொறை நாட்டிற்குத் தென் கிழக்கிலுள்ள பகுதிகளில் அவர்கள் முன்னேறி வந்தனர். சேரர் படைத் தலைவர்களும் சிற்றரசர்களும் அவர்களை அப் பகுதிகளில் புகுதல் கூடாது என விலக்கினர். அவர்கள் அவ்வுரைகளைக் கேளாது இப் பகுதி தமிழ் வேந்தர் மூவருக்கும் பொதுமையானது ; சேரர்க்கே சிறப்பாக உரியது எனல் கூடாது என மறுத்துப் போருடற்றினர். இச் செய்தி செல்வக் கடுங்கோவுக்குத் தெரிவிக்கப்பட்டது இது சோழ பாண்டியர்க்கும் பொது என்ற அச் சொல்லைக் கேட்கப் போறாது தனது பெரும் படையைத் திரட்டிச் சென்று எதிர்த்து வந்த வேந்தரை முறையே பொருத


  1. பதிற். 62.
  2. பதிற். 62.