பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர நாடு 23



தோன்றி மைசூர் நாட்டிலோடு நாக நதியின் பெயர் இதனை வற்புறுத்துகிறது. மணிமேகலை ஆசிரியர், “நக்க சாரணர் நாகர்வாழ் மலைப்பக்கம்[1]” என்று குறிப்பது இந்த நாக நாடாகலாம் என அறிஞர் சிலர் கருதுகின்றனர்.

இவ்வாற்றால் சேர நாட்டின் வடவெல்லை இன்றைய வட கன்னட நாட்டகத்தும் பரவியிருந்த தென்பது தெரிகிறது.

மேனாட்டறிஞரான பிளினி (Pliny) என்பாரது குறிப்பை ஆராயுங்கால், சேர நாட்டின் தென் னெல்லை இப்போதுள்ள கொல்லமும் கோட்டாற்றுக் கரையும் (Kottarakkara) எனத் தெரிகிறது. மேலும், திருவிதாங்கூரின் : தென் பகுதி முற்றும் பாண்டிய நாடாகவே இருந்ததென்றும் விளங்குகிறது. பெரிப்புளூஸ் நூலாசிரியர் குறிப்பும் இம் முடிபையே வற்புறுத்துகிறது.

இங்கே காட்டிய மேனாட்டறிஞர் குறிப்புகள் இப்போதைக்கு 1800 ஆண்டுகட்கு முற்பட்டன. அந் நாளில் விளங்கிய தமிழ்ச் சேர நாட்டின் தென் னெல்லை கொல்லத்தோடு நின்ற தென்பது தெளிவாம். அந்த அறிஞர்கள் குறிக்கும் தொண்டி, முசிறி முதலியன சேரர்களைப் பாடிய சங்க இலக்கியங்களிலும் காணப்படுவன. இவ்வாறே வட கன்னட நாட்டில் வழங்கும் செய்திகளால் பண்டைநாளைச் சேர நாடு கோகரணத்துக்கு வடக்கேயும் பரந்திருந்தமை தெளிவாய்த் தெரிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில்


  1. மணி. xvi 15-16.