பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக்கடுங்கோ வாழியாதன் 253



ஒருபுடை நண்புடைய வேந்தர் இருப்பக் கடுங்கோவின் அருகில் மலர்ந்த கண்ணும் பெருத்த தோளும் கொண்டு, கடவுட் கற்பும் நறுமணங் கமழும் நெற்றியும் விளங்க, வேளாவிக் கோமான் பதுமன் கூத்தும் நவிற்றிப் பரிசில் பெற்று மகிழ்ந்தனர். இவற்றைக் கண்ட கபிலர், “பூண் அணிந்து விளங்கிய புகழ்சால் மார்ப, நின் நாண்மகிழ் இருக்கை இனிது கண்டிரும்[1]” என்று பாடினர்.

சின்னாள்கள் கழித்தன. கபிலருக்குப் பாரி - மகளிரின் நினைவு வந்தது. மலையமான் நாட்டை நோக்கிச் செல்லும் கருத்துட் கொண்டார். தன் னிடத்தில் பேரன்பு செலுத்தும் கடுங்கோவுக்கு அதனை வெளிப்படக் கூறுதற்கு அஞ்சிக் குறிப்பாகத் தெரிவிக்க நினைத்தார். சேரமான் கொடைமடத்தை ஏனைச் சான்றோர்க்குத் தெரிவிப்பது போல, “சான்றீர், நீவிர் வேண்டுமாயின், செல்வக் கடுங்கோவைச் சென்று காண்மின்; அவன் பகைவர்பால் பெற்ற யானைகளை மிகைபட நல்குவான்; தன் நாட்டில் விளையும் நெல்லை, மரக்காலின் வாய் விரிந்து கெடுமளவு மிகப்பலமாக அளந்து தருவான்[2] என்ற கருத்து அடங்கிய பாட்டொன்றைப் பாடினர். பிறிதொருகால், பாணன் ஒருவனைச் செல்வக் கடுங்கோ, வாழியாதனிடத்தில் ஆற்றுப் படுக்கும் பொருளில், “பாணனே, எங்கள் பெருமானான செல்வக்கடுங்கோ, போர்ப்புகழ் படைத்த சான்றோர்க்குத் தலைவன், நேரி மலைக்கு உரியவன்; அம் மலையில் மலர்ந்திருக்கும் ‘காந்தட்


  1. பதிற். 65.
  2. பதிற். 66.