பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254 சேர மன்னர் வரலாறு



பூவின் தேனையுண்ட வண்டு பறக்க இயலாது அங்கேயே சூழ்ந்து கிடக்கும். நீ அவன்பால் சென்றால், உனக்கும் உன் சுற்றத்தாருக்கும் கொடுமணம் என்ற ஊரில் செய்யப்படும் அரிய அணிகலங்களையும், பந்தர் என்னும் மூதூரிற் செய்யப்படும் முத்து மாலைகளையும் தரப் பெறுவாய்[1]” என்று பாடினர். இதன்கண் உண்ண லாகாத காந்தட் பூவின் தேனைப் படிந்துண்டதனால் வண்டினம் பறக்க இயலாது கெடுவது போலக் கடுங்கோவுக்கு உரியதாதலால் கைக் கொள்ளலாகாத நேரிமலையைக் கருதிப் போர் தொடுத்தமையால், பகை வேந்தர் கெட்டனர் என்ற கருத்துப் பொதுவாகவும், கடுங்கோவை அடைந்து அவன் தரும் கலங்களைப் பெறுவோர், தங்கள் நாட்டை மறந்து அவன் தாணிழலிலே கிடந்து வாழ்வர் என்று கருத்துச் சிறப்பாவும் உள்ஸ்ரீத்தப்பட்டிருப்பதைச் சேரமான் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டான்.

கடுங்கோவுடன் கபிலர் இருந்து வருகையில், சேர நாட்டின் வடக்கில் உள்ளது எனத் தாலமி முதலியோர் குறிக்கும் ஆரியக (Ariyake) நாட்டு[2] வேந்தனான பிரகத்தன் என்பான் கடுக்கோவின் நண்பனாதலால் அவனைக் காண வந்தான். அந்த ஆரியக வேந்தனுடன் இருந்து சின்னாள் பழகிய போது அவனுக்குத் தமிழரது அகப்பொருள் நெறியை அறிவுறுத்த வேண்டிய நிலைமை கபிலர்க்கு உண்டாயிற்று. அகப்பொருள்


  1. பதிற். 67.
  2. ஆரியகம், குட நாட்டின் வடக்கில் உள்ளது; ஆரியாவர்த்தத் இதனின் வேறு; அது இமயத்துக்கும் விந்தமலைக்கும் இடைப்பட்டது.