பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 சேர மன்னர் வரலாறு



வாழ்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோரணத்தைப் பாடிய திருப்பதிகத்தால்[1] அஃது அவர் காலத்தே தமிழ் நலம் பெற்று விளங்கியதென்று தெரிகிறது. வட கன்னட நாட்டு ஹோனவார் பகுதியில் ஹோனவாருக்குத் தெற்கே 25கல் தொலைவில் இருக்கும் பாட்கல் (Bhatkal) என்னும் ஊரில் இருக்கும் கோயில்களில் இரண்டு தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன[2]. இக் குறிப்புகளால் சேர நாட்டின் வடவெல்லை வட கன்னடத்துக் கோகரணம் வரையில் பரவியிருந்ததென்ற கொள்கை மேற்கொள்ளத் தக்கதாகின்றது.

பிற்காலத்தே சேரநாட்டுக்கு எல்லை பலவகை யாகக் கூறப்படுவதாயிற்று. வடக்கிற் பழநாட்டுக்கும் கிழக்கிற் செங்கோட்டுக்கும், மேற்கிற் கோயிக் கோட்டுக்கும், தெற்கிற் கடற்கோட்டிக்கும் இடையில் கிடந்த சேர நாடு என்பது காவதம் பரப்புடையதென்பது ஒருவகை; எண்பது காவதப் பரப்புடைய சேரநாட்டுக்கு வடக்கிற் பழனியும் கிழக்கில் தென்காசியும் மேற்கில் கோயிக்கோடும் தெற்கிற் கடற்கோடியும் எல்லை யென்பது மற்றொரு வகை[3]; வடக்கிற் பழனியும் கிழக்கிற் பேரூரும் தெற்கிலும் மேற்கிலும் கடலும் எல்லையாகக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் என்பது காவதப் பரப்புடையது சேரநாடு எனக் கூறுவது வேறொருவகை[4]. பழனிக்குப் பண்டை நாளைப் பெயர் பொதினி[5] என்பது; ஆவி நன்குடி யென்பதும் ஒன்று[6]; எனவே, பழனியை


  1. திருஞான: 337-2
  2. Bombay Graze:. Kanara part II P. 266-71
  3. பெருந்தொகை 2091
  4. W.L. Mala. p. 255
  5. அகம், 61
  6. முருகு. 176.