பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260 சேர மன்னர் வரலாறு



கருவுரென்றும் கல்வெட்டுகளில் பெயர் குறிக்கப் படுகிறது. கருவூரும், முசிறியும் சேரநாட்டு மேலைக் கடற்கரையில் உள்ள ஊர்களின் பெயர்கள்; கொங்கு நாட்டைச் சேரவரசின்கீழ்க் கொண்டதற்கு அறிகுறி யாகச் சேரர் இப் பெயர்களைப் புகுத்தினராதல் வேண்டும். அதியமான்களுடைய கல்வெட்டுகள் வடார்க்காடு மாவட்டத்திலும் தென்னார்காடு மாவட்டத்திலும் காணப்படுகின்றன. திருநாவுக்கரசர் சூலைநோய் நீங்கிச் சைவரான இடமாகிய திருவதிகை, அதியரைய மங்கை எனப்படுவதால், அதற்கும் இவ்வதி யர்க்கும் தொடர்புண்டு என எண்ண இடமேற்படுகிறது.

இனி, மேலைக் கடற்கரை நாட்டுச் சேரரது ஆட்சி , கொங்குநாடு முழுதும் பரந்து தகடூர் நாட்டை நெருங்குவது கண்டனர் தகடூர் நாட்டு அதியமான்கள். அக் காலத்தே, ஆவியர், ஓவியர், மலையமான் என்பாரைப் போல, அதியர் என்னும் குடியில் தோன்றிப் புகழ் பொருள் படை ஆண்மை முதலிய வற்றின் சிறப்பால், அவர்கள் புலவர் பாடும் புகழ் படைத்து விளங்கினர். ஒளவையார்க்கு நெல்லிக்கனி வழங்கி நெடும் புகழ் பெற்று நெடுமான் அஞ்சி, இந்த அதியர் குடியில் தோன்றிய பெருந்தகையாவன். இக் குடியில் தோன்றிய தலைவர்கள் கி.பி. பத்துப் பன்னிரண்டாம் நூற்றாண்டினும் ஆங்காங்கு இருந்திருக் கின்றனர். பிற்காலத்தே சோழர்க்குத் துணையாய் இருந்து கன்னட வேந்தரோடும் பல்லவ சேர மன்னர்க்குத் துணையாய்ச் சோழ பாண்டியரோடும் பிறரோடும் பொருது மேன்மை எய்தியிருக்கின்றனர்.