பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 267



செய்து வரும் கலங்கள் கரைக்கு வந்ததும், அவற்றை அவ்வப்போது பழுது பார்த்துச் செம்மை செய்து கொள்வது போல, போரிற் புண்பட்டு வரும் யானை களின் புண்ணை ஆற்றிப் பின்பு அவற்றைச் செய்வினை சிறப்புறச் செய்யும் விறனுடையன வாக்கி இரவலர்க்கு வழங்கினர். சேர நாட்டு உழவர் பகன்றைப் பூவால் தொடுத்த கண்ணி யணிந்த சில ஏர்களைக் கொண்டு பலவிதை வித்திப் பயன்பெறும் பாங்குடையர் என்று அரிசில் கிழார் சான்றோர் பால் கேட்டறிந்திருந்தார். பொறையனது பாசறையை நெருங்க நெருங்க, தாம் கேள்வியுற்றவையெல்லாம் அரிசிலார் உள்ளத்தில் ஓர் அழகிய பாட்டாய் உருக்கொண்டன. வேந்தன் அவரது வருகை அறிந்ததும், அவரை எதிர்கொண்டு வரவேற்று இருக்கை தந்து மகிழ்வித்தான். சான்றோராகிய கிழாரும் தனது மனத்தில் உருவாகியிருந்த பாட்டைச் சொல்லி இறுதியில், “இரப்போர்க்கு ஈதல் தண்டா மாசிதறு இருக்கை கண்டனென் செல்கு வந்தனென்[1]” என்றார். வேந்தன் இன்புற்று அவரைத் தன்னோடே இருக்குமாறு வேண்டினான்.

பெருஞ்சேரல் இரும்பொறை கொல்லிக் கூற்றத்தில் இருந்த கழுவுளது குறும்பை அடக்கி அவன் தன்னைப் பணிந்து தனக்கு உரியனாமாறு செய்து கொண்டதையும், வேளிருட் சிலர் சேரமானைச் சேர்ந்து கொண்டதையும், தகடூர் நாட்டு வேந்தனான அதியமான் எழினி அறிந்தான். மேற்கே கொண்கான


  1. பதிற். 76.