பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 269



அரிசில்கிழார் சேரனுடைய போர்ச் சுற்றத்தாரைக் கண்டார். அவர்கள் செல்வக் கடுங்கோவின் காலத்தேயே நல்ல பயிற்சியும் ஆற்றலும் கொண்டு விளங்கினவர். அவர்கள் கூறுவனவற்றையும் இரும் பொறை அவர்கட்கு அளிக்கும் நன்மதிப்பையும் காணக் காண அரிசில் கிழார்க்கு அவன்பால் உளதாகிய நற்கருத்து உயர்ந்தது. அத் தானை வீரரிடத்தே பேர் அறிவும் அறமும் சிறந்து விளங்கின. பல வகைகளில் சேரமானுடைய பண்பும் செயலும் அவர்களுடைய பண்பையும் செயலையும் ஒத்திருந்தன. தகடூர் நாட்டுத் தலைவர்கள், சேரரின் அறிவு ஆண்மை படை முதலியவற்றை அறிந்தொழுகுதற்கு ஏற்ற வய்ப்புகள் பல இருந்தும், தம்முடைய மடமையால் கெடுவது அரிசில் கிழாரது புலமைக் கண்ணுக்குப் புலனாயிற்று.

சில நாள்களுக்கெல்லாம் தகடூர் நாட்டுத் தலைவர்களுக்கும் சேரமானுக்கும் போருண்டாயிற்று, சேரர்படை, அதிபர் தலைவர்கள் இருந்த ஊர்களைச் சூழ்ந்த சூறையாடலுற்றது. சேரர் படை புகுந்த விட மெலாம் தீயும் புகையும் மிக்கொழுந்தன. ஒரே காலத்தில் பல இடங்களில் தீ எழுந்தது. எங்கும் தீயும் புகையும் சேரக் கண்ட அரிசில் கிழாரது நெஞ்சம் நீராய் உருகிற்று. அத் தீக்குக் காரணமாய் நின்ற பகை வேந்தரின் பெரு மடமையை நினைந்து ஒருபால் சினமும், ஊழிக் காலத்தில் உலகில் பரவும் திணியிருளைப் போக்குதற்கு ஞாயிறுகள் பல தோன்றுவதுபோலச் சேரர் படை கொளுவும் நெருப்புப் பரந்தெழுவதும், அக் காலத்தில் பரவும் பிரளய வெள்ளத்தை வற்றச் செய்யும் வடவைத்