பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 275



போர்க் களிறுகள் அணிகொண்டு நிற்க, போர் எதிர்ந்து நிற்கும் பகைவர் படைமுன், சேராது படை மறவர் வில்லும் அம்பும் ஏந்தி இங்குமங்கும் உலாவி, ‘'எம் வேந்தனான சேரலன், நும்மை ஏற்றுப் புரந்தருளுதற்கு இசைந்துள்ளான்; நுமக்குரிய திறையினைப் பணிந்து தந்து உய்தி பெறுமின்” என வெளிப்படையாக எடுத்து மொழிந்தனர். சேரர் படையின் சிறப்பினைக் கண்ட பலர், சேரமானிடத்தில் புகலடைந்து திரையிட்டு அவனது அருளிப்பாடு பெற்றனர். அவ்வாறு செய்யாதார் பொருதழிந்து புறந்தந்தோடினர். அவர் தம் மதிற்றலையில் நின்ற கொடிகள் இறங்கின. சேரமா னுடைய விற்கொடி சேணுயர்ந்து சிறந்தது[1] சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் புகழ் தமிழகமெங்கும் பரந்தது.

சேரமானை யுள்ளிட்ட எல்லோரும் இன்புற்றிருக் கையில் சான்றோராகிய அரிசில் கிழாரது மனம் மட்டில் பெரு வருத்தம் கொண்டது. அதியர்குடி புலவர் பாடும் புகழ் பெற்ற பெருங்குடி; அதன்கண் தோன்றி வந்த வேந்தர் அனைவரும் கைவண்மை சிறந்தவர். கற்றோர் பரவும் கல்வியும், செற்றோரும் புகழும் மற மாண்பும் அதியர் குடிக்குச் சிறப்பியல்பு. அது வழியெஞ்சிக் கெடலாகாது என்பது அரிசில் கிழார் முதலிய சான்றோர் கருத்து. அது பற்றியே அவர் பன்முறையும் எழினிபால் தூது சென்று சேரமானுக்கு அவனை நண்பனாக்கித் தகடூர் அரசு நிலைபெறச் செய்ய வேண்டும் என முயன்றார். அவருக்கு எழினியின் வீழ்ச்சி பெரு


  1. பதிற். 80.