பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280 சேர மன்னர் வரலாறு


கண் உள்ளனவும் யாவும் நீயே ஏற்றுக் கொளல் வேண்டும்; இதுவே யான் நின்பால் இரந்து கேட்டுக் கொள்வது” என்றார் வேந்தனும் அவரது மன மாண்பைப் பாராட்டி மகிழ்ந்தான்.

இஃது இங்ஙனமாக, அவன் செய்த வேள்வியை முன்னின்று நடத்திய சான்றோர் நரைத்து முதிர்ந்த ஒரு வேதியராவர். அவர்க்கும் இரும்பொறை, அரிசில் கிழார்க்குச் செய்தது போன்ற பெருஞ்சிறப்பினைச் செய்தான். தான் எய்தியிருக்கும் முதுமைக் கேற்ப அவர்க்கு மண்பொன் முதலியவற்றில் ஆசை அவியாது பேராசையாய்ப் பெருகி அவர் உள்ளத்திற் குடிகொண்டு இருப்பது தெரிந்தது. “இளமை இறந்த பின்னரும், அதற்குரிய நினையும் செயலும் அவர்பால் தீரா திருப்பது, மக்களொடு துவன்றி அறம் புரியும் சுற்றத்தோடு நிரம்பியுள்ள சான்றோர்க்குச் சால்பாகாது; ஆதலின் நீவிர் துறவு மேற்கொண்டு காடு சென்று தவம் புரிதல் தக்கது” என அறிவுறுத்தி அவரைத் துறவு மேற்கொள்ளச் செய்தான். இவ்வாறு அறம் புரிந்து மேன்மையுற்ற பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழி யாண்டு அரசு வீற்றிருந்தான் எனப் பதிகம் கூறுகிறது


12. குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பின், சேரமான், குடக்கோ சேரல் இரும்பொறை என்பான் சேரநாட்டு அரசனாக விளங்கினான். அவன்