பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை 291



நாட்டுப் போரில் உண்டான வீழ்ச்சி சேரமான்பால் பகைமையுணர்வை உண்டாக்கிவிட்டது. பழையனுக்குத் தானைத் தலைவனாகவும் அறிவுத் துணைவனாகவும் வித்தை என்ற பெயரையுடைய தலைவன் ஒருவன் இருந்தான். அவன் பாண்டிய நாட்டில் இப்போது திருப்புத்தூர் வட்டம் என வழங்கும் பகுதியில் பிறந்தவன்; அவனது வித்தையூர் இப்போது வித்தியூரென விளங்குகிறது. அவன் தொடக்கத்தில் பாண்டிநாட்டு மோகூரிலிருந்து ஆட்சி செய்த பழையன் என்னும் குறுநிலத் தலைவனுக்கு நண்பனாயிருந்து அவன் வழியினனாகிய இளம் பழையனுக்குத் துணையாய் வந்திருந்தான்.

இளம்பழையனும் வித்தையும் இரும்பொறையோடு போர் தொடுக்கக் கருதி நல்லதொரு சூழ்ச்சி செய்தர். கோப்பெருஞ்சோழனுக்கு மக்கள் சிலர் உண்டு. அவர்கள் தெளிந்த அறிவும் தகுந்த வினைத் திட்பமும் இல்லாதவர். அவர்களை மெல்ல நண்பராக்கித் தமக்குத் துணைபுரியுமாறு அவர்கள் உள்ளத்தைக் கலைத்தனர். அவர்கள் ஒருவாறு உடன்பட்டுக் கோப்பெருஞ்சோழனைக் கலந்தனர். கோப்பெருஞ்சோழன் சான்றோர் சூழவிருக்கும் சால்பும் மானவுணர்வும் மலிந்தவன. அவற்குப் பொத்தியார் என்பவர் அறிவுடை அமைச்சராய் விளங்கினார்; அவர் வேந்தற்கு உற்றுழி உயிர் கொடுக்கும் பேரன்புடையவர். மக்கள் கூறுவது கேட்ட கோப்பெருஞ்சோழன், இரும்பொறையின் ஆற்றலையும், படைவலி துணைவலி முதலிய வலிவகைகளையும் சீர் தூக்கி இரும்பொறையோடு