பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298 சேர மன்னர் வரலாறு



உடற்றி வீறு பெறுவாய்[1]” என்றார். மனம் மாறிய வேந்தன் அவ்வாறே வஞ்சிநகர் சென்றன்.

சின்னாட்கெல்லாம் சேரமான் வந்து சேர்ந்தான் அவனுடைய செலவும் வரவும் பிறர் எவரும் அறியா வகையில் நடந்தன. இவ்வாறே பழையன் மாறனும் துணைப்படை யொன்று கொணர்ந்தான். போரும் கடிதில் தொடங்கிற்று. முற்றியிருந்த எயில்கள் பலவும் சேரர் படை வெள்ளத்தின் முன் நிற்க மாட்டாது சீரழிந்தன. புதுப்படையும் பழம் படையும் கலந்து நின்ற பகைவர்படை வலியிழந்து கெட்டது. எஞ்சியவற்றுள் சோழர்படை எதிரே காட்சியளித்தது; சேரமான், ‘சென்னியர் பெருமானை என்முன் கொணர்ந்து நிறுத்துக” என ஆணையிட்டான் கோபெருஞ்சோழன் மக்கள், பழையன் மாறனுக்கு துணை வந்திருப்பது சேரமானுக்கு மிக்க சினத்தை உண்டாக்கிற்று. இச் செய்தியைத் தானைத் தலைவர்கள் படை மறவர்க்குத் தெரிவித்த ஓசை, சோழருடைய படை மறவர் செவிப்புலம் புகுந்தது. சோழன் மக்கள் மானமிழந்து இருந்தவிடம் தெரியாதபடி ஓடிவிட்டனர். சோழர் படைமறவர் தாம் ஏந்திய வேல்களைக் களத்தே எறிந்துவிட்டு ஓடினர். அவர்கட்குத் தக்கது சொல்லித் தேற்றிச் சந்து செய்விக்கக் கருதிய பெருங்குன்றூர் கிழார் திரும்பி வந்து, “வேந்தே, நீ நின் தானைக்கிட்ட ஆணை கேட்டதும், சோழர் படையை எறிந்து விட்டு ஓடிய வேல்களை எண்ணினேன். ஒன்று நினைவுற்கு வந்தது.


  1. பதிற். 81.