பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300 சேர மன்னர் வரலாறு



கோப்பெருஞ் சோழன். அவனுக்கு அவர்கள் மேல் அடங்காச் சினமுண்டாயிற்று. அவர்களும் கோப்பெருஞ் சோழனது மான மாண்பை உணராது அவனையே எதிர்த்து நின்றனர். சோழர் குடிக்குரிய பெரும் புகழைக் கொன்ற அவர்களைக் கொல்வதே கருமம் என அவன் தானைபண்ணிப் போர்க் கெழுந்தான். உடனே, அங்கிருந்த புல்லாற்றார் எயிற்றியனார் என்னும் நல்லிசைச் சான்றோர், அவனது பெருஞ் சினத்தைத் தணித்து அறநெறியை எடுத் துரைத்தனர். சோழனும் மானவுணர்வும் மறமாண்பும் இல்லாத மக்களொடு உயிர் வாழ்வதை விட, அறம் நோற்று வடக்கிருந்தொழிதல் நன்று எனத் தேர்ந்து உறையூர்க்கு வடக்கில் காவிரியாற்றின் இடைக்குறையில் தங்கி வடக்கிருந்து உயிர் துறந்தான். எயிற்றியனாரது புல்லூற்றூர் இடைக்காலத்தில், பில்லாறு என மருவி, “இராசராச வளநாட்டுப் பாச்சில் கூற்றத்துப் பில்லாறு[1]” என நிலவி இப்போது மறைந்து போயிற்று. திருவெள்ளறை, கண்ணனூர் முதலியவை இப் பாச்சில் கூற்றத்தைச் சேர்த்தவை.

இது நிற்க, பின் பொருகால், கொங்கு நாட்டின் வடபகுதியான குறும்பு நாட்டுப் பூவானி யாற்றின் கரைப்பகுதியில் வாழ்ந்த குறுநிலத் தலைவர்கள் சேரமானுக்கு மாறாகக் குறும்பு செய்வாராயினர். இந் நாளில் பவானி என வழங்கும் பெயர், பண்டை நாளில் வானியென்றே வழங்கிற்று; இதற்குக் கோபி


  1. A.R. No. 126 of 1936-7.