பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை 303



தீங்குகளை நாடிச் செய்யும் நயமுடையவன். பாணர் பொருநர் முதலிய பலரையும் பரிவோடு புரக்கும் பண்புடையவன்; சுருங்கச் சொன்னால், புனலிற் பாய்ந்து ஆடும் மகளிர் இட்ட காதணியாகிய குழை எத்துணை ஆழத்தில் வீழ்ந்தாலும் தன் தெளிவுடைமை யால் அவர்கள் எளிதில் கண்டெடுத்துக் கொள்ளத்தக்க வகையில் தெளிந்து காட்டும் வானியாற்று நீரினும், சேரமான் மிக்க தண்ணிய பண்புடையன்[1] என்று கூறித் தெருட்டினார். அவர்களும் அவர் சொல்லிய வண்ணமே இரும்பொறையால் புகலடைந்து அவ்வாறு அருள் பெற்று அவன் ஆனைவழி நிற்பாராயினர்.

இனி, குட்ட நாட்டின் தெற்கிலுள்ள வேணாட்டில் மரத்தை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு வேளிர்கள் ஆட்சி செய்து வந்தனர். இமயவரம்பன், செங்குட்டுவன் முதலிய பேரரசர் காலத்தில் சேரநாடு தென்பாண்டி நாடு முழுவதும் பரந்திருந்தமையின், மரத்தையோர் அவர்கட்குக் கீழ்ச் சிற்றரசர்களாய்த் திகழ்ந்தனர். இந்த மரத்தை நகர் மேனாட்டு யவன ஆசிரியர்களால் மருந்தை (Marunda) என்று குறிக்கப் படுகிறது. இப்போது நாஞ்சில் நாட்டுக் கல்குளம் வட்டத்தில் இருக்கும் மண்டக்காடு என்பது பண்டை நாளை மரத்தையாகவும் இருக்கலாம் என்று கருதுவோரும் உண்டு. ஒருகால் இம் மரத்தையோர் இளஞ்சேரல் இரும்பொறையால் பிணக்கம் கொண்டு வேறுபட்டனர். அவர்கட்கு அவன் சான்றோரைக்


  1. பதிற். 86.