பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை 305



கிழான் கூறுவதே சிறந்ததாக முடிவாயினமையின் அவனையே வேள்வியாசனாய் இருந்து வேள்வியை முடிக்குமாறு வேந்தன் ஆணையிட்டான்.

அந் நிலையில் பெருங்குன்றூர் கிழாரும் வந்து சேர்ந்தார். அவர் வருகையை வேந்தன் வியப்போடு நோக்கினான். அவன் நோக்கத்தைப் பெருங்குன்றூர் கிழார் அறிந்து கொண்டு, “மாந்தரன் மருகனே, இனிய நீர் போலும் தண்மையும், அளப்பரும் பெருமையும், குறையாச் செல்வமும் கொண்டு, விண்மீன்களின் இடைவிளங்கும் திங்கள் போலச் சுற்றம் சூழ இருக்கின் றாய், நீயோ உரவோர் தலைவன்; கொங்கர்கோ; குட்டுவர் ஏறு, பூழியர்க்கு மெய்ம்மறை; மரந்தையோர் பொருநன்; பாசறை இருக்கும் வயவர்க்கு வேந்து; காஞ்சி மறவரான சான்றோர் பெருமகன்; ஓங்குபுகழ் கொண்ட உயர்ந்தோன். எல்லாவற்றிற்கும் மேலாக, நீ காவிரி நாடு போன்ற வண்மையும், கற்புறு பொற்பும், கலங்காத நல்லிசையுமுடைய நல்லாளுக்குக் கணவன்; நின்வாழ் நாள் வெள்ள வரம்பினவாக என உள்ளிக் காண வந்தேன்[1]” என்றார். அப் பாட்டின் நலம் கண்டு சான்றோர் பலரும் அவரது புலமையை வியந்த பாராட்டினர். வேந்தனும் அவர்க்கு மிக்க சிறப்புகளைச் செய்தான்.

பின்பு, அங்கு நடைபெற்ற வேள்வியில் புரோகிதன் தவறு செய்ததும் மையூர் கிழான் எடுத்துக் காட்டியதும் வேந்தன் முடிவு கூறியதும் சான்றோர்களால் பெருங்


  1. பதிற். 90.