பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ 309



கடுங்கோ பாண்டியனாவன். தென்பாண்டி நாட்டுப் பகுதிக்குக் கடுங்கோ மண்டலம் என்பதோடு குடநாடு என்ற பெயரும் இருப்பது நோக்கின், பாண்டியனான கடுங்கோ, இப்பொறை நாட்டுக் கடுங்கோ வழியினனாக லாம் என்றும், அவனுடைய முன்னோர் தமது நாட்டை நினைவு கூர்தற் பொருட்டு இத் தென் பாண்டி நாட்டுப் பகுதியைக் குடநாடு என்று வழங்கியிருக்கலாம் என்றும், கடுங்கோவுக்குப் பின் குடநாடு கடுங்கோ மண்டலமாகி யிருக்கலாம் என்றும், எனவே, பொறை நாட்டுக் கடுங் கோக்களுக்கும் தென்பாண்டி நாட்டுக் குடநாட்டுப் பகுதியை யாண்ட கடுங்கோவுக்கும் தொடர்பு இருந் திருக்கலாம் என்றும் நினைத்தற்குப் போதிய இடம் உண்டாகிறது. இவ்வாறே நாவரசர் காலத்தில் தென்குமரிப் பகுதி கொங்கு நாடு[1] எனப் பெயர் எய்திய தற்கும் காரணம் இல்லாது போதற்கு இடனில்லை என அறியலாம்.

இது நிற்க, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ என்பன இக் கடுங்கோ நாட்டு வேந்தர் பெயராதலை அறிய வேண்டும். பாலை பாடிய பெருங்கடுங்கோ நன்னனது ஏழில் மலை நாட்டைப் பாராட்டிப் பாடுகின்றார். கொண்கான நாடு பொன்வளமுடையது என்றும், அந் நாடு நன்னனுக்கு உரியது என்றும், அந் நாட்டில் ஏழில்மலை சிறந்ததொரு மலை என்றும், பெறுதற்கரிய பேறுகளுள் அவ் வெழில் மலை சிறந்தது என்றும் கூறுகின்றார். இதனால், இவர் நன்னன் வாழ்ந்த


  1. திருநாவுக். 213: 2.