பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320 சேர மன்னர் வரலாறு



உள்ளது போலச் சுழலா நிற்கும் என இறும்பூதுபடக் கூறுகின்றார்” என்றும், “பிரிவுண்மை அறிந்த தலைவி தலைவனை மயக்கும் தன்மையுடைய கோலத்தோடு வந்து அவன் மீது சாய்ந்து முயங்கி வருந்துவதாக இவர் கூறியது நீத்தாரை விழைவிக்கும் திறந்ததாகும்” என்றும், “பிரிவோர் பழியுடையரல்லர்; அவரைப் பிணிக்க அறியாத தோள்களே தவறுடையன எனத் தலைவி கூறுவதாக அமிழ்தம் பொழியா நிற்பர்” என்றும் கூறி மகிழ்ச்சி கொள்வர்.

“இரவலர் வரா வைகல் பல ஆகுக” என்றாற் போலும் சொற்றொடர்களால் பெருங்கடுங்கோ ஈகையிலும் சிறந்து விளங்கினார் என்பது தெளிவாகிறது. மேலும், பெருஞ்செல்வமும், செல்வத்துக்கேற்ற புலமைச் செல்வமும், கொடை நலமும் சிறக்கப் பெற்ற இச் சேரமான் தன்னை நாடி வந்த பரிசிலரை நன்கு சிறப்பித்திருப்பர் என்பது சொல்லாமலே விளங்குவ தொன்றன்றோ!


14. யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை வழியில் யானைக் கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தோன்றிச் சேர நாட்டு அரசு கட்டிலேறிச் சேரமானாய் விளங்கினான். சேய் என்பது இந்த இரும்பொறையின் இயற்பெயராகும். தனது சிறு கண்ணைக் கொண்டு பருவுடலைத் தாங்கி நெறியறிந்து இயங்கும் யானை