பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330 சேர மன்னர் வரலாறு



மூடிக் காண்பார்க்கு நிலம் போலக் காட்சி நல்கச் செய்திருந்தான். இச் சூழ்ச்சியைச் சேரமான் எவ் வண்ணமோ தெரிந்து கொண்டான். சேரமான் ஒற்றர்கள், காண்பார் ஐயுறாத வகையிற் போந்து வேந்தனுடைய நலம் அறிந்து அவற்கு வேண்டும் உதவிகளைச் செய்து வந்தனர்.

பாண்டியன் செய்தது போன்ற செயலைப் பூழி நாட்டவர் யானைகளைப் பற்றுதற்காகச் செய்வது வழக்கம். சேர நாட்டுச் சான்றோர் புகுந்து வேந்தன் இருப்பதை உணர்ந்துகொள்ள முயன்றால், அவர்களை அகழியில் அகப்படுத்திக் கொள்ளுதற்கும், சேரமான் தப்பியோட முயன்றால் அவன் அகப்பட்டு வீழ்தற்கு மாக இச் சூழ்ச்சியைப் பாண்டியன் செய்திருந்தான். சேரமான் யானைக்கட்சேய், அதனைத் தெரிந்து கொண்டு பாண்டியர் சூழ்ச்சி பாழ்படுமாறு சீர்த்த முயற்சிகள் செய்தான்; தான் இருந்த சிறைக் கோட்டத்துக்குப் பாண்டியர் வந்து போதற் பொருட்டுச் செய்திருந்த கள்ள வழியை அறிந்து அதன் வாயிலாகக் காவலர் அயர்ந்திருந்த அற்றம் பார்த்து வெளிப் போந்தான். உடனே அவனுடைய வாள் மறவர் அவ் வழியைத் தூர்த்துவிட்டனர். சிறைக்கோட்டத்தைச் சூழ்ந்திருந்த பாண்டிப் படைமறவர் பற்பன்னூற்றுவர் அகழகியை மறைத்திருந்த நிலத்திற் பாய்ந்தனர். அஃது அவரனைவரையும் அகழியில் தள்ளி வீழ்த்திற்று.

சிறிது போதிற்குள் சேரர் படை போந்து அகழியை அழித்து அரணைச் சிதைத்துச் சிறைக்கோட்டத்தைத் தீக்கிரையாக்கிற்று. உயிருய்ந்த பாண்டி மறவர் சிலர்,