பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334 சேர மன்னர் வரலாறு


ஐங்குறுநூறு என்னும் தொகை நூலைத் தொகுத்தார். அத்தொகைநூலின் இறுதியில் இந்நூல் தொகுத்தார். “புலத்துறைமுற்றிய கூடலூர் கிழார்” என்றும், தொகுப்பித்தான், “கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை” என்றும் பண்டைச் சான்றோர் குறித்திருக்கின்றனர். இவர் மாந்தர்க்குரிய மாந்தை நகரத்தைக் குறுந்தொகைப் பாட்டொன்றில்[1] குறித்துள்ளார். தலைமகனோடு கூடி இல்வாழ்க்கை புரியும் தலைமகள், அவற்கு முளிதயிரைப் பிசைந்து புளிக்குழம்பு செய்து உண்பித்தலும், அவன் “இனிது” எனச் சொல்லிக் கொண்டு உண்பதும், அது கண்டு அவளது ஒண்ணுதல் முகம் “நுண்ணிதின் மகிழ்ந்ததும்[2]“ படிப்போர் நாவில் நீருறுமாறு பாடியவர் இக் கூடலூர் கிழாரேயாவர். அத்தலைமகள் களவுக் காலத்தில் தலைமகன் விரைந்து வரைந்து கொள்ளாது ஒழுகியது பற்றி மேனி வேறுபட்டாள்; அதற்குரிய ஏது நிகழ்ச்சியையுணராத அவளுடைய தாயார் வெறியெடுக்கலுற்றது கண்டு, தோழி, தலைமகன் ஒருகால் தலைமகள் இருந்த புனத்துக்குப் போந்து “பெருந்தழை உதவி” யதும், பின்பு “மாலை சூட்டியதும்” அறியாது, இவ்வூரவர் வெறி நினைந்து ஏமுறுகின்றனர்[3] என அறத்தொடு நிற்பதாக இக் கூடலூர்கிழார் பாடிய பாட்டுத் தமிழறிஞர் நன்கறிந்தது.

இவர், வயது மிகவும் முதிர்ந்திருந்ததனால் குறுங்கோழியூர் கிழார் போலச் சேரமானை அடிக்கடிச்


  1. குறுந். 166.
  2. குறுந். 6.
  3. குறுந். 214.