பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336 சேர மன்னர் வரலாறு



இன்று தன் துணைவரையும் மறந்தான் கொல்லோ” என அவர் வருந்திக் கூறுவன நெஞ்சையுருக்கும் நீர்மை யுடையவாகும்.

இறுதியாக ஒன்றி கூறுதும்: இந்த யானைக்கண் சேய் மாந்தரன், சேரன் செங்குட்டுவனுக்கு மகன் என்று திரு. கனகசபைப் பிள்ளையவர்கள் கூறினாராக, அவரைப் பின்தொடர்ந்து டாக்டர் திரு. எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்களும், திரு. பானர்ஜி அவர்களும்[1] கூறியுள்ளனர். இவர்கள் கூற்றுக்கு ஓர் ஆதரவும் கிடையாது. தமிழ்நாட்டு வரலாறு எழுதிய ஆராய்ச்சியாசிரியர் சிலர் தமிழ் நூல்களை ஆழ்ந்து நோக்காது தாம் தாம் நினைந்தவாறே தவறான முடிபுகள் கொண்டு ஆங்கிலத்தில் எழுதி வரலாற்றுலகில் புகுத்தியிருக்கின்றனர். இவ்வாறே திரு. கே.ஜி. சேஷையரவர்கள் சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையும் சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுகின்றார்[2]. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை காலத்தில் சோழ நாட்டில் இராயசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும் பாண்டி நாட்டில் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழிதியும் ஆட்சி செய்தனர். சேரமான் யானைக்கட்சேய் காலத்தில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சி செய்தான்; ஆகவே சேரமான்கள் இருவரும் வேறு வேறு காலத்தவர் என்பது


  1. Junior History of India. p. 94.
  2. Cera Kings of the Sangam Period.