பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340 சேர மன்னர் வரலாறு



எல்லையாக இருந்தது. மாந்தரன் சோழரொடு பொருது தோற்றாடி வந்தது. தென்பாண்டி நாட்டவர் வேணாட்டிற் புகுந்து அலைப்பதற்கு இடந்தந்தது. மாந்தரன் போதிய வலியிலன் என அவர்கள் தவறாக எண்ணி வேணாட்டவர்க்குத் தொல்லை விளைவித்தனர். அதனால் விளங்கியில் வாழ்ந்த மக்கள் பெரு விழுமம் எய்தினர். இச்செய்தி மாந்தரனுக்குத் தெரிந்தது. உடனே, அவன், பெரும் படையொன்று கொணர்ந்து விளங்கிலர் எய்திய விழுமம் போக்கி இன்பவாழ்வு எய்தச் செய்தான்.

மாந்தரன் விளங்கிலில் தங்கி யிருக்கையில் அவனைச் சான்றோர் பலர் பாராட்டிப் பாடிப் பரிசில் பெற்றுச் சென்றனர். அப் பகுதியில் பொருந்தில் என்னும் ஊரில் வாழ்ந்த இளங்கீரனார் என்னும் சான்றோர் மாந்தரனைக் கண்டார். மாந்தரனுக்குச் செந்தமிழ் வல்ல சான்றோபால் பேரன்புண்டு; அதனால் அவன் பொருந்தில் இளங்கீரனாரை அன்புடன் வரவேற்று இன்புற்றான்.

மாந்தரனுக்குப் பண்டைப் புலவர் நிரலில் ஒருவராய் நிலவிய கபிலருடைய பாட்டில் பெரிதும் ஈடுபாடு உண்டு. ஓய்வுக் காலங்களில் அவர் பாட்டைப் படித்து மகிழ்வது அவனுக்கு வழக்கம். இளங்கீரனார் அவனுக்குத் தாம் பாடிய பாட்டுகளிற் சிலவற்றைப் பாடிக் காட்டினார்.

பொருள் கருதிப் பண்டைப் புலவர் நிரலில் ஒருவராய் நிலவிய கபிலருடைய பாட்டில் பெரிதும் ஈடுபாடு உண்டு. ஓய்வுக் காலங்களில் அவர் பாட்டைப்