பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் வஞ்சன் 345


யிருந்த அஞ்சனக்குன்று நீலகிரி என்று வடசொல்லாக மாறிற்று. அங்கு அஞ்சனகிரி என்ற ஒரு மாளிகையும் இருந்தது எனக் குடகு நாட்டில் கல்வெட்டாராய்ச்சியும் புதை பொருளாராய்ச்சியும் நிகழ்த்திக் கண்ட லூயி ரைஸ்[1] என்பார் குறித்துள்ளார். கோடைக்கானலின் பழைய வரலாறு, எவ்வாறு அஃது ஆங்கிலர் சென்று காண்பதற்கு முன்பே தமிழர் கண்டு வழங்கிய சிறப்புடையது என்பதைக் காட்டுகின்றதோ, அவ்வாறே நீலகிரியும் ஆங்கிலம் அறிந்த நகரமைக்கக் கருதியதற்கு முன்பே, தமிழர் அறிந்து வழங்கும் சால்புடைது என அறிஞர் அறிதல் வேண்டும். இதற்கு அந்த ஆங்கில மக்கள் நேர்மையோடு செய்து தந்த ஆராய்ச்சியே சான்றாவதையும் எண்ணுதல் வேண்டும். அஞ்சன் குன்று அஞ்னகிரியாகி நீலகிரியாயிற்று. அவ்வூரது காவலருமையும் வஞ்சனுடைய தோள் வன்மையும் தாமனாரது புலமைக்கு விருந்து செய்கின்றன. அவர் அவ்வூரைப் பெரும் பெயர் மூதூர் என்றும், வஞ்சனை, “வரையுறழ் மார்பின் புரையோன்” என்றும் புகழ்ந்து பாடுகின்றனர்.

ஒருகால், திருத்தாமனார் விடியற்போதில் கிணைப் பொருநரும் உடன்வர அவனது செல்வ மனைக்குச் சென்றார் முற்பக்கத்து நிலவு மறைய வெள்ளியாகிய மீன் தோன்றி விண்ணில் விளக்கம் செய்தது. கோழிச் சேவல் எழுந்து கூவத் தொடங்கிற்று. பொய்கைகளில் நெய்தல் முதலிய பூக்கள் மலரத்


  1. R.L. Rice: Coorg. Ins. Vol. No. 10.