பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348 சேர மன்னர் வரலாறு



விளங்கினான். சேரமான் மாவண் கோவை மாரி வெண்கோ எனவும் சில ஏடுகள் கூறுகின்றன.

உக்கிரப்பெருவழுதி பாண்டி வேந்தனாய் வீற்றிருக்கையில் கிழக்கில் முத்தூற்றுக் கூற்றத்தில் வேங்கை மார்பன் என்னும் குறுநிலத் தலைவன் ஆட்சி செய்து வந்தான். முத்தூற்றுக் கூற்றம் என்பது இப்போதுள்ள இராமநாதபுர நெல்வேலி மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியாம். அந்நாளில் அப்பகுதியிலுள்ள கானப்பேரெயில் சிறந்த அரண் அமைந்து பாண்டியர்க்கு உரியதாயிருந்தது. உக்கிரப்பெருவழுதி அரசு கட்டிலேறிய காலத்தில் அதனை வேங்கை மார்பன் என்பான் கைப்பற்றிக்கொண்டு செருக்கினான். கானப்பேரெயில் வெயிற் கதிர் நுழையாவாறு செறியதத் தழைத்த காவற் காடும் பகைவர் நுழைதற் கரிய காட்டரணும் உடையது; மதிலரண் வானளாவி உயர்ந்தும் நீரரணாகிய அகழி நிலவெல்லைகாறும் ஆழ்ந்தும் இருந்தன. வானளாவி நின்ற மதிலின் உறுப்புகள் வானத்தின்கண் தோன்றும் மீன் போல் காட்சியளித்தன. இந்நலங்களைக் கண்ட வேங்கை மார்பன் இதனைத் தனக்கே உரியதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவா மேலிட்டதால் இதனை அவன் கைப்பற்றிக் கொள்ளலானான்.

இதனை அறிந்தான் உக்கிரப் பெருவழுதி; பெரும் படையொன்றைத் திரட்டிக் கொண்டு கானப் பேரெயிலை நோக்கிச் சென்றான். வேங்கை மார்பனும் தனது அரும்படையோடு எயில் காத்து நின்றான். வேங்கையின் படையும் பாண்டிப் படையும் கடும் போர்