பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் குட்டுவன் கோதை 357



தொன்றுதொட்டே பழைமையான நகரம் என்றும், நரசிம்மவர்மன் என்ற கடம்ப வேந்தனொருவன், மிகவும் பழமை பெற்றிருந்த அதனைப் புத்திக்கிக் கொத்த கரூர் என்ற பழம்பெயரை மாற்றி நரசிம்மங்காடி எனப் புதுப் பெயரிட்டான் என்றும் கூறுகின்றனர். கொங்காணிகளில் பழையோர் அதனைக் கொத்த கனவூர் என்பர். இச்செய்திகளை நினைத்துப் பார்க்குங்கால், பண்டை நாளில் அப் குதி முற்றும் தமிழ் வழங்கும் நல்லுலகமாய்த் திகழ்ந்தது எனவும் அக்காலத்தில் பிட்டங்கொற்றனால் அது கொற்றன் கருவூர் என்றோ கொற்றன் நறவூர் என்றோ வழங்கி வந்து, பின்பு வேறு வேறு பெயர் கொண்டது எனவும் நினைத்தற்கு இடமுண்டாகிறது,

இக்கொற்றன், நறவூரிலிருந்து படைமடம் படாது கொடைமடம் பூண்டு புகழ் பெருகி வாழ்வது தமிழகமெங்கும் நன்கு பரவியிருந்தது. அக்காலத்தில் வஞ்சி நகர்க்கு அண்மையிலுள்ள கருவூரில் கதப்பிள்ளை என்றொரு சான்றோர் வாழ்ந்தார். அவர் பெயரைச் சில ஏடுகள் கந்தப்பிள்ளை என்றும் கூறுவதுண்டு. குட நாட்டில் பிட்டங்கொற்றன் குதிரைமலைக் குரியனாய் ஈதலும் இசைபட வாழ்தலுமே வாழ்வின் ஊதியமாய்க் கருதிப் புகழ் நிறுத்தும் இன்பநெறி யறியாத ஏனை வேந்தர் நாணுமாறு தமிழகம் அறியச் செய்து கொண் டிருப்பதை நேரிற் கண்டார். முடிவில் கதப்பிள்ளை அவனது திருவோலக்கத்தை அடைந்து அவன் செய்யும் கொடைவளத்தைப் பார்த்துக், “கைவள்ளீகைக் கடுமான் கொற்ற, ஈயா மன்னர் நாண், வீயாது பரந்த நின்