பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358 சேர மன்னர் வரலாறு



வசையில் வான்புகழ் வையக வரைப்பின் தமிழகம் கேட்பப், பொய்யாச் செந்நா நெளிய நாளும், பரிசிலர் ஏத்திப் பாடுப என்ப[1]” என்று பாடிப் பாராட்டினர். அவர்பால் பேரன்பு கொண்ட பிட்டன், மனம் மகிழ்ந்து பெருஞ்செல்வத்தைப் பரிசிலாகத் தந்து அவரைச் சிறப்பித்தான்.

சில நாள்களுக்குப் பின், சேரர்க்கு உரிய கொங்கு நாட்டில் படர்ந்து வாழ்ந்து வந்த கோசர் என்பார் குட்டுவன் கோதைக்கு மாறாக எழுந்து நாட்டில் குறும்பு செய்யத் தலைப்பட்டனர். பேராற்றல் கொண்டு விளங்கிய நன்னனையே நாட்டினின்று வெருட்டி யோட்டிய தறுகண்மை மிக்கவர் கோசர் என்பது குட்டுவனுக்கு நன்கு தெரிந்த செய்தி. மேலும், அவர்கள் விற்போரில் அந் நாளில் சிறந்து விளங்கினர். அதனால் அவன் வில்லோர் பெருமகனான பிட்டங் கொற்றனைத் தனக்குத் துணைபுரியுமாறு வேண்டினான். பிட்டனும் தன் வில் வீரருடன் குட்டநாடு போந்து அங்கே குட்டுவன் தன்னுடைய படையுடன் போதரக் கொங்கு நாட்டிற் புகுந்து குறும்பு செய்தொழிகிய கோசரது விண்மைச் செருக்கை வீழ்த்தினான்.

கோசர்கள், தாம் இளமையில் விற்பயிற்சி பெற்றபோது எவ்வண்ணம் அம்பு எய்வரோ அவ்வண்ணமே எய்வதாகப் பிட்டன் கருதினான். அவர் சொரிந்த அம்புகள் பிட்டனுடைய மனநிலையையோ வலியையோ சிறிதும் அசைக்கவில்லை. பிட்டன்


  1. புறம். 168.