பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360 சேர மன்னர் வரலாறு



பரிசில் தந்து விடுதல் வேண்டும்[1] என வேண்டினர். “கோசரது விற்போர் கண்ட எனக்கு, அவரது இளமைப் பயிற்சியையே அவரது விற்போர் மிகவும் நினைப்பித்தது. இளமைக் காலத்தில் அவர்கட்கு இலக்கமாய் நின்ற முருக்கமரக் கம்பம் போல நின் மார்பு காணப்பட்டது; அன்று அவர்கள் எய்த அம்புகள் பலவற்றில் ஒன்றிரண்டே அக் கம்பத்திற்பட்டது போல இன்றும் மிலச் சிலவே நின்னை அடைந்தன; அவர்களால் அக் கம்பம் வீழ்த்தப் படாமைபோல் இன்று நீ அவரது வில்வன்மையை விஞ்சி நிற்கின்றாய்” என்று அவர் குறிப்பாய் உரைத்தார்; அது கண்டு பிட்டன் பெரிதும் வியந்து அவர்க்கும் பிறர்க்கும் மிக்க பரிசில் நல்கி விடுத்தான்.

அந் நாளிலேயே தமிழகத்தின் அரசியலைச் சீரழித்து, அதன் பரப்பைச் சுருக்கி அதன் மொழியாகிய தமிழையும் கெடுத்து உருக்குலைக்கக் கருதிய கூட்டம் தோன்றி விட்டது. அதனுடைய சூழ்ச்சியும் செயல்படத் தொடங்கிவிட்டது. “நல்ல போலவும், நயவ போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும்” அச் சூழ்ச்சிகள் தொழில் செய்தன. படை மடம்படாமை ஒன்றையே கைக் கொண்டு ஏனைக் கொடை முதலிய துறைகளில் பெருமடம் பூண்பது பெருமையாக அவர்கட்கு அறிவுறுத்தப்பட்டது; அவ் வகையில் அவர்களும் அறிவறை போயினர். தமிழ்ப் புலமைக் கண்ணுக்கு அஃது அவ்வப்போது புலனாயிற்று. செவ்வி வாய்க்கும்


  1. புறம். 166.