பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் குட்டுவன்கோதை 361



போதெல்லாம் புலவர்கள் அதனை எடுத்துரைத்துத் தெருட்டி வந்தனர். அத்தகைய நிகழ்ச்சியொன்று சோழ பாண்டிய நாட்டில் தோன்றிற்று. சோழ பாண்டியரது ஒருமை தமிழகத்துக்குப் பேரரணமாகும் என்பதை அச்சூழ்ச்சிக் கூட்டம் உணர்ந்து அதனைக் கெடுத்தற்கு முயன்று கொண்டிருந்தது.

அதனைக் கண்டு கொண்டார், நம் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், தமிழ் அரசு வீழின், தமிழர் வாழ்வும் தமிழகத்தின் பரப்பும் தமிழ் மொழியின் மாண்பும் கெட்டழியும் என்பதைச் சால்புற உணர்த்தொழுகிய அவரது தமிழ் உள்ளம் ஒரு சிறிதும் பொறாதாயிற்று, ஒரு கால், சோழன் குராப் பள்ளித்[1] துஞ்சிய திருமாவளவனையும், பாண்டியன் வெள்ளி யம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியையும் ஒருங்கிருப்பக் காணும் செவ்வியொன்று கண்ணனார்க்கு வாய்ந்தது. உடனே அவர், “அன்புடைய உங்கள் இருவர்க்கும் இடைபுகுந்து கெடுக்கும் ஏதில் மாக்கள் உளர்; அவருடைய பொது மொழியைக் கொள்ளாது இன்றே போல்க நும் புணர்ச்சி[2] என்று பாராட்டிக் கூறினார். இத்தகைய தமிழ்ச் சிறப்புடைய காரிக்கண்ணனார் பிட்டங் கொற்றனைப் பெரிதும் பாராட்டிப் பாடிய குறிப்பு நல்லிசைச் சான்றோர் பலர்க்குப் பிட்டனைக் காண்டல் வேண்டும் என்ற விருப்பத்தை உண்டு


  1. குராப்பள்ளியென்பது இக் காலத்தே திருவிடைக்கழி என வழங்குகிறது. M. Ep. A.R.No.265 of 1925, வெள்ளியம்பலம்- மதுரை மாடக் கூடலின் ஒருபகுதி.
  2. புறம். 58.