பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366 சேர மன்னர் வரலாறு



விளங்கிற்று. இச் சேரமான் பெரும்படையும் மிக்க போர் வன்மையும் உடையன்.

இவன் காலத்தே கொங்கு நாட்டில் மூவன் என்றொரு குறுநிலத் தலைவன் வாழ்ந்தான்; அவன், முன்பு ஒருகால், பெருந்தலைச் சாத்தனார் என்னும் சான்றோர்க்குப் பரிசில் கொடாது நீட்டித்து வருத்திய மூவன் வழியில் வந்தவனாவன். இந்த மூவன், சேரமான் கணைக்காலிரும் பொறையை ஒருகால் இகழ்ந்து அவனது பகைமையைத் தேடிக் கொண்டான். நா காவாது சேர வேந்தை வைது உரைத்த அவனை, இரும்பொறை, போரில் வென்று அவன் வாயிற் பல்லைப் பிடுங்கித் தன் தொண்டி நகர்க் கோயில் வாயிற் கதவில் வைத்து இழைத்துக் கொண்டான். மத்தியென்பான் ஒரு காலத்தில் சோழ வேந்தனை வைதுரைத்த எழினி யென்பவனுடைய பல்லைப் பிடுங்கி வெண்மணி [1]’ யென்னும் நகரத்துக் கோயில் வாயிற் கதவில் வைத்து இழைத்துக் கொண்டதுண்டு[2]. ஆகவே, சேரமான் கணைக்காலிரும்பொறை மூவன் பல்லைப் பிடுங்கிக் கொண்டதில் வியப்பு ஒன்றும் கோடற்கில்லை. பண்டையோர் கொண்டிருந்த பகைத்திறச் செயல் வகையில் அதுவும் ஒன்று போலும்.

இந்த இரும்பொறை காலத்தில் சோழ நாட்டில் சோழன் செங்கணான் அரசு புரிந்து வந்தான். அவன் சிவபெருமான் பால் பேரன்புடையன். அவன் செய்த கோயில்கள் பல தமிழகத்தில் உள்ளன. திருஞான


  1. A.R. 379 of 1918.
  2. அகம். 211.