பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிப்புரை 375



குற்றுயிராய்க் கிடந்தான். அவன் கழாத்தலையாரையும் அவருடன் போந்த பரிசிலர் சுற்றத்தையும் கண்டு கண்ணீர் சொரிந்து, தன் கழுத்திற் கிடந்த ஆரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பால் உணர்த்தினான். உடனிருந்த சான்றோர் பலரும் அவனது வள்ளன்மையை நினைந்து வியந்து வருந்தினர். “நின் வெற்றி கண்டு பாடிக் களிறு முதலிய பரிசில் பெற வந்தோம். களிறுகள் கணை பட்டுத் தொலைத்தனர்; தேர்கள் பீடழிந்து நிலஞ் சேர்ந்தன; குதிரைகள் குருதிப்புனலில் கூர்த்தொழிந்தன; ஆகவே யாம் பாடி வந்தது. நின் தோளிடைக் கிடந்த ஆரம் பெறற்கே போலும்[1]” என்று பாடிப் பரிபுலம்பினர். சேரலாதனும் சிறிது போதில் உயிர் துறந்தான். அதனைக் கண்ட கழாத்தலையார் மனம் கரைந்து,

“அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந்தனரே; குடை துளங்கினவே;”

என்று சொல்லி, இருவரும் ஒருங்கே இறந்ததைச் சுட்டி ,

“பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞலம்
இடங்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்
களம்கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர் என்றும்
உடன்வீழ்ந் தன்றால் அமரே”

அவ் வேந்தருடைய மனைவியரும் பின்னே உயிருடன் இருந்து கைம்பெண்களாய் வாழ்வதை


  1. புறம். 368.