பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380 சேர மன்னர் வரலாறு



கொள்ளும் கடன்மை மேற்கொண்டனர். நங்கையின் காதல் முறுக்கிக் பெருகி அவனை இன்றி அமையாத செவ்வி எய்தவும், அவன் கடிமணத்தை விரைந்து நாடாது சிறிது காலம் தாழ்க்கலுற்றான். அவனைக் கடிமணத்தில் கருத்தைச் செலுத்துவிக்கக் கருதுகிறான் தோழி. அவன் காலம் தாழ்த்துவதால் நங்கையின் மேனி வாடுகிறது. அதனையும் தோழி காண்கிறாள். ஒருநாள் அவன் வரவு கண்ட தோழி அவனை நோக்கி,

"பெருமை என்பது கெடுமோ ஒருநாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண்நறுங் கானல் வந்து நும்
வண்ணம் எவனோ என்றனிர் செலினே“

என்று வினவுகின்றாள்.

பெரியோருடைய பெருமை என்பது, பிறர்நலம் பாராட்டலும் பிறர்க்கு உளதாகும் குறையறிந்து தாங்கலுமாகும். நாடோறும் இங்கே வந்து இவளது நலம் பாராட்டுவதாகிய பெருமைப் பகுதியை மாத்திரம் மேற்கொண்டு செய்கின்றாய். இந் நங்கைக்கு உண்டாகிய வண்ணக் கேட்டினைக் கேட்டறிதல் பெருமையன்று எனக் கருதகின்றவர் போல வாளாது போகின்றாய்; ஒரு நாளைக்கேனும் யாங்கள் மனம் தெளியக் கேட்பீராயின், எனக்கு அது மிக்க ஆறுதலையாகும்; நும் பெருமைக்கும் சிறப்பாம் என்றெல்லாம் சொல்லக் கருதிய தோழி, சுருங்கிய சொற்களால் பெருமை யென்பது கெடுமோ?” என்று சொல்லுகிறாள்.